Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

‘திமுக தலைமை’ என்ற கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா ? எத்தனை காலம்தான் மக்களை ஏமாற்றுவீர் ? பாஜக நிர்வாகி கேள்வி !

Oredesam by Oredesam
November 7, 2024
in அரசியல்
0
250 கோடி ரூபாய் செலவு செய்து தீபாவளி கொண்டாடிய திமுக-பாஜக நிர்வாகி ஆவேசம்
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் A.N.S. பிரசாந்த் அறிக்கை ஒன்று நீ வெளியிட்டுள்ளார்.அதில்,டாக்டர் அம்பேத்கர் அவர்களால் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ‘ஆரிய – திராவிட’ இனவாத கோட்பாட்டை சொல்லி எத்தனை காலம்தான் மக்களை ஏமாற்றுவீர்?

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரிக்கு பதில் அளிக்கிறேன் என்ற பெயரில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா அவர்கள், “கி.மு. 3000-ம் ஆண்டில் மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் தங்கள் ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் இடம் தேடி கைபர் போலன் கணவாய் வழியே உள்ளே நுழைந்தனர்.

READ ALSO

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

கொஞ்ச காலத்தில் பிராமணர்கள் மதத் தலைமையைக் கைப்பற்றினார்கள். அவர்களின் மனுதர்மம் வடக்கே உள்ள வாழ்வியல் முறையை வகுத்துத் தந்தது. பிறப்பால் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று மக்கள் பிரிக்கப்பட்டனர்” என்று நீதி கட்சி தொடங்கப்பட்ட காலம் முதல் பாடிவரும் பழைய பல்லவியை மீண்டும் பாடியிருக்கிறார்.

இந்துக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அவர்களை மதம் மாற்றுவதற்காக, ராபர்ட் கால்டுவெல் போன்ற கிறிஸ்தவ பாதிரியார்கள் உருவாக்கிய கற்பனை கதை தான் ஆரிய – திராவிட இனவாதம்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஆரிய – திராவிட இனவாத கோட்பாட்டிற்கு சரியான இடம் குப்பை தொட்டிதான் என்று கூறியிருக்கிறார். இதை வசதியாக மறைத்துவிட்டு ஆராசா போன்றவர்கள் ஆரிய – திராவிட இனவாத கோட்பாட்டை மீண்டும் மீண்டும் சொல்லி தமிழ்நாட்டில் இனவாத அரசியலை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்து மதத்தில் ஜாதி வேறுபாடுகள் இருப்பது உண்மைதான். அது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்துக்கள் அனைவரும்,தங்களை ‘இந்துக்களாக உணர்ந்தால்’ ஜாதி வேறுபாடுகள் அறவே ஒழியும். அதற்கான முயற்சிகள் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கின்றன. மக்கள் மனங்களில் இருந்து ஜாதி வேறுபாடுகளை களைய ஸ்ரீராமானுஜர் போன்ற மகான்கள் ஆற்றிய பணிகளை நாம் அனைவரும் அறிவோம்.

கடந்த நூறாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஜாதி வேறுபாடுகளை களைய, மக்கள் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்த களப்பணியாற்றி வருகிறது. அதற்கு மிகப்பெரிய வெற்றியும் கிடைத்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவராக இருந்த தேவரஸ் அவர்கள், ‘தீண்டாமை பாவம் இல்லை என்றால், இந்த உலகில் வேறு எதுவும் பாவமில்லை’ என்று கூறியிருக்கிறார். இந்து மதத்தில் தீண்டாமைக்கு இடமில்லை என்பதை இதைவிட யாரும் அழுத்தம் திருத்தமாக கூறிவிட முடியாது.

ஆனால், மொழி வெறியையும், இனவெறியையும் தூண்டி, குடும்ப அரசியல் நடத்திவரும் சில கட்சிகள், இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து அரசியல் ஆதாயம் அடைந்து வருகின்றன. இந்துக்களில் ஒரு பிரிவினரின் வாக்குகளையும், சிறுபான்மை மதத்தினரின் வாக்குகளையும் பெற்று ஆட்சி அமைக்கும் இக்காட்சிகள், இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகின்றன. இந்து மதத்தில் ஜாதி வேறுபாடுகள் நீடிப்பதற்கு இது போன்ற கட்சிகளின் சுயநல சூழ்ச்சி அரசியலே காரணம்.

இன்று தமிழகத்தில் எந்த ஜாதி பெயரையும் சொல்லியும் யாரையும் இழிவு படுத்திவிட முடியாது. ஆனால், பிராமணர்களை, அவர்கள் இழிவு சொல்லாக கருதும் ‘பார்ப்பான்’ என்ற பெயரை சொல்லியும், அவர்களின் பழக்க வழக்கங்கள், பேச்சு மொழியையு கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் வெளிப்படையாகவே எழுதுகின்றனர்.

அவர்கள் குறித்து புகார் அளித்தால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. புகார் கொடுக்க வந்தவர்களையே விரட்டியடிக்கும் நிலை தான் தமிழகத்தில் இருக்கிறது. அதனால்தான், பிராமணர்கள் தங்களுக்கு சட்டப் பாதுகாப்பு வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த இந்திய அரசியலமைப்பு சட்டம் அனைவருக்கும் உரிமை வழங்கி இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எங்கும் எதிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மின் கட்டண உயர்வால் குறு, சிறு, நடுத்தரத் தொழில் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. சொத்து வரி, பால் விலை, மின் கட்டணம் என்று அனைத்தும் உயர்ந்து விட்டன. இதிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப, மீண்டும் ‘இனவாத அரசியலை’ திமுக கையில் எடுத்திருக்கிறது இதைத்தான் ஆ.ராசா அவர்களின் அறிக்கை வெளிப்படுத்துகிறது.

பிறப்பின் அடிப்படையில் இந்து மதத்தில் வேறுபாடுகள் இருப்பதாகவும், அதை பிராமணர்கள் ஏற்படுத்தியதாகவும் ஆகும் ஆராசா கூறுகிறார். ‘அனைவரும் சமம், சமத்துவம். என்பது தான் திமுகவின் கொள்கை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இது உண்மையானால் ‘திமுக தலைமை’ என்ற கருவறைக்குள் ஆ.ராசா அவர்களால் நுழைய முடியுமா? ஆ.ராசா போன்ற திறமையும், அனுபவமும் வாய்ந்த தலைவர்கள் திமுக தலைவராக, முதல்வராக முடியுமா? பெரம்பலூர் பொது தொகுதி ஆன பிறகு, ஆ ராசா, நீலகிரி தனித் தொகுதியில் போட்டியிடும் சூழல் ஏன் உருவானது? ஆ.ராசா போன்ற முக்கிய தலைவர்களையே பொதுத் தொகுதியில் நிறுத்த முடியாத அளவுக்கு திமுகவில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறதா?

பிறப்பின் அடிப்படையில் திமுக தலைமை நிரப்பப்படுவது பற்றி ஆராசாவின் கருத்து என்ன? இது பிறப்பின் அடிப்படையிலான தீண்டாமை இல்லையா? இதை நவீன மனுதர்மம் அல்லது திராவிட மனு தர்மம் என்று கூறலாமா? பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தியும், அதை துளியும் மதிக்காமல் தங்களின் மூன்றாம் தலைமுறை வாரிசான உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்கி இருக்கிறது திமுக தலைமை.

‘தந்தை – மகன் – பேரன்’ என்று கட்சி தலைமைக்கு பிறப்பின் அடிப்படையில் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் ஒரு கட்சியில் இருந்து கொண்டு மனுதர்மம் பற்றி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். வேதனைப்பட வேண்டும். மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். திமுகவின் இனவாத அரசியல் இனி எடுபடாது.என அவர் கூறி உள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

TVK தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது-பாஜக நிர்வாகி அறிக்கை.
அரசியல்

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

March 7, 2026
vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026
“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.
அரசியல்

“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

February 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
அரசியல்

நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !

January 2, 2026
Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ராஜஸ்தான் கேரளாவில் நடக்கும் குற்றங்களை மறைக்கவும் 2 ஜி வழக்கை  திசை திருப்பவும் நடக்கும் நாடகம் !

ராஜஸ்தான் கேரளாவில் நடக்கும் குற்றங்களை மறைக்கவும் 2 ஜி வழக்கை திசை திருப்பவும் நடக்கும் நாடகம் !

October 7, 2020
“காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்” கோபாலபுரத்து வரலாற்றை ஒரே பேட்டியில் காலி செய்த அண்ணாமலை!

“காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்” கோபாலபுரத்து வரலாற்றை ஒரே பேட்டியில் காலி செய்த அண்ணாமலை!

October 19, 2021
இந்தியா வந்த அமெரிக்க ராஜதந்திரி ஆண்டனி பிளிங்கன்! மோடி அரசால் உலக அரங்கில் மிகபெரிய இடம் பெற்ற இந்தியா!

இந்தியா வந்த அமெரிக்க ராஜதந்திரி ஆண்டனி பிளிங்கன்! மோடி அரசால் உலக அரங்கில் மிகபெரிய இடம் பெற்ற இந்தியா!

July 30, 2021
நாங்கள் ஏன் நீட் தேர்வை ஆதரிக்கிறோம் மு.க.ஸ்டாலினின் உச்சிமண்டையில் குட்டியிருக்கும் நீதிமன்றத்திற்கு நன்றி! பா.ஜ. க நிர்வாகி வீர திருநாவுக்கரசு!

பாஜகவில் அடுத்த அதிரடி கவர்னராக தமிழக பாஜக மூத்ததலைவர் நியமனம்.

August 22, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x