கடந்த ஒரு வாரமாக கார்த்திக் சிதம்பரம் குறித்த சில சந்தேகங்கள் சமூக வலைத்தளங்களில் வட்டமடித்து வருகிறது அதற்கு காரணம் அவர் பிரதமர் மோடி குறித்து தந்தி தொலைக்காட்சியில் அளித்த பேட்டி தான் இந்த நிலையில் தான், கார்த்தி சிதம்பரத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல் ஓங்கியுள்ளது. இதன் படி கார்த்தி சிதம்பரத்தின் எதிர்கால அரசியல் எப்படி இருக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு எகிற வருகின்றன.
கார்த்தி சிதம்பரம் மீதான அரசியல் நிலைப்பாடு குறித்த சந்தேகத்தை சிலர் எழுப்பி வருகிறார்கள்.. இதற்கு சமீபகாலங்களில், கார்த்தி சிதம்பரம் கொடுத்த பேட்டிகளும் அவரது ட்வீட்களும் தான் காரணம்.. 5 மாநில தேர்தல் முடிவுகள் வந்திருந்த நேரத்தில், கார்த்தி சிதம்பரம் காங்கிரசின் கட்டமைப்பு பாஜகவுக்கு இணையாக இல்லை.. அதனால் கட்சியை சீரமைத்து மாற்றியமைக்க வேண்டும்.பாஜகவிற்கு அதிகம் செல்வாக்கு இருப்பதையே இந்த இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது… காங்கிரஸை விட அவர்களின் செல்வாக்கு உயர்ந்துள்ளது, இது யதார்த்தமான உண்மை” என்றார்.
கார்த்தி சிதம்பரம் இப்படி கூறியிருந்தது, பாஜகவை உயர்த்திப்பிடித்து, சொந்த கட்சியை விமர்சிப்பது போல அப்போது பார்க்கப்பட்டது.. ஈவிஎம். இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து, காங்கிரஸ் கட்சியினர் சிலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும்நிலையில், கார்த்தி சிதம்பரம், மின்னணு வாக்கு இயந்திரங்களை எந்த நெட்வொர்க் மூலமும் மோசடியாக இயக்க முடியாது என்று கூறியிருந்ததும், சொந்த கட்சியினரை உற்றுகவனிக்க வைத்தது..
அதுமட்டுமல்ல, திமுகவின் திராவிட மாடல் என்றால் என்ன? என்று கார்த்தி சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் ஒருமுறை கேட்டிருந்தனர்.. அதற்கு கார்த்திக் சிதம்பரம், “திராவிட மாடல் என்ன என்பதற்கு அறிஞர்கள்தான் விளக்கம் சொல்ல வேண்டும்.. தமிழகத்தில் அவர்களுடைய அரசாங்கம் அவர்களுடைய செயல்பாட்டை வரவேற்கிறேன். ஆனால் இந்திய அளவிற்கு அவர்கள் ஒரு மாடலை உருவாக்கி இருக்கிறார்களா? இல்லையா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
ராகுலுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு காங்கிரஸார் கொதித்துக் கிடந்த அதே நாளில், எம்பி கார்த்தி சிதம்பரம் காட்டிய ரியாக்ஷன் தமிழகத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.தன்னுடைய சிவகங்கை மக்களவை தொகுதியில் நாய்கள் தொல்லை அதிகம் இருப்பதாகவும் அதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி இருந்தாராம் காங்கிரஸ் எம்பி-யான கார்த்தி சிதம்பரம். அவரது கடிதம் தனக்குக் கிடைத்ததாக பதில் போட்டிருந்தாராம் மோடி. இதற்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்திருந்தார் கார்த்தி… இப்படி நாய் விவகாரத்துக்கு நன்றி தெரிவித்து மோடிக்கு ட்விட் செய்த விவகாரம் காங்கிரஸார் மத்தியில் பெரும்விவாதமானது
பாராளுமன்றத்துக்கு வந்த ராகுல் காந்தியை, அங்கிருந்த சிலர் பாராளுமன்ற வாசலில் அவருக்கு கைகொடுத்தார்கள். அங்கே கருப்புச் சட்டை சகிதம் நின்ற கார்த்தியும் ராகுலுக்கு கைகொடுக்க முயன்றார்… ஆனால், அவரது முகத்தைக்கூட திரும்பிப் பார்க்காமல் ராகுல் விறு விறுவென உள்ளே சென்றுவிட்டார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத கார்த்தி படியைவிட்டு கீழே இறங்கி, ராகுல் செல்வதையே பார்த்தபடி நின்றார்… இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
பல மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியை தழுவிக்கொண்டிருந்த நேரத்தில், அதிலும் காங்கிரஸ் தொண்டர்கள் வருத்தத்திலும், வேதனையிலும் மூழ்கி கொண்டிருந்த நேரத்தில், நெட்பிளிக்சிஸ் எந்த படம் பார்க்கலாம் எனக்கு பரிந்துரைக்கவும் என்று ட்விட்டரில் கேட்டிருந்ததை, கட்சியினரால் ஜீரணிக்க முடியவில்லை
நீட் ரத்துக்கு எதிராக கருத்து தெரிவிப்பதும், ஆன்லைன் சூதாட்டம் தடை விதிப்பதற்கும், என்றிருந்த நிலையில், ராகுல் பதவி பறிக்கப்பட்டபோது, கேண்டி கிரஸ் விளையாட்டின் போட்டோவை கார்த்திக் பதிவிட்டதை ஒருபோதும் காங்கிரசால் ஏற்று கொள்ள முடியவில்லை..
ஏற்கனவே சிவகங்கை மாவட்டத்தில், உட்கட்சி பூசலும் தலையெடுத்து வருகிறது.. குறிப்பாக மேலிட காங்கிரசுடன் எம்பி மாணிக்கம் தாகூர் கொண்டுள்ள நெருக்கம் மற்றும், எம்பி சீட் வாங்கும்போது ஏற்படும் நெருக்கடிகள், இதெல்லாம்கூட, சிதம்பரம் குடும்பத்துக்கு சமீபகாலமாக எரிச்சலை தந்து வருவதாக சொல்லப்பட்டு வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், சில மாதங்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் எடுத்துக் கொண்ட செல்பி இணையத்தில் வெளியானது.. ஏதேச்சையாக கோவை ஏர்போர்ட்டில் சந்திக்கவும், கேஷூவலாகவும் இரு தலைவர்களும் இப்படி செல்பி கொண்டதாகவே கருதப்பட்டாலும், இந்த போட்டோ பலவித உறுத்தல்களை சீனியர் கதர்கள் மத்தியில் எழுப்பி சென்றது..
மோடியின் பிம்பத்தை உடைப்பது மிக கடினம் – என தனியார் தொலைக்காட்சி பேட்டியில் கூறினார் அவர் யதார்த்ததை பேசினார் அதை காங்கிரசார் பதார்த்தமாக எடுத்து கார்த்தி சிதம்பரத்தை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளார்கள் தந்தை சிதம்பரம் போன்றவர்களும் பதவிக்காக ஏங்கித் தவிக்கும் பல காங்கிரஸ் தலைவர்களின் செயல்பாடுகளால் தான் பல பின்னடைவுகளை சந்தித்து வருகின்றது….
இதே கார்த்தி சிதம்பரம் சில மாதங்களுக்கு மோடிக்கு பாராட்டு மழை பொழிந்ததை அறிந்தோர் பலருண்டு….
இன்றைய காங்கிரஸ் கட்சியில் ஆர்வத்தோடு இணைந்து சேவை செய்ய இளைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு உற்சாகம் ஊட்டி பொறுப்புகளை வழங்கி ஆதரவு தர வேண்டும் காங்கிரஸ் தலைமை
சிவகங்கை எம்.பி கார்த்தியை காங்கிரசை விட்டு நீக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக கட்சியின் ஒரு பிரிவினர் அறிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் காங்கிரசை கட்சியினர் இரு கோஷ்டிகளாக செயல்படுகின்றனர். மாவட்ட தலைவராக சத்தியமூர்த்தி இருந்தார். சில நாட்களுக்கு முன்பு சஞ்சய்காந்தி மாவட்ட காங்., தலைவராக அறிவிக்கப்பட்டார். எனினும் இவரது தலைமையை ஏற்காததால் கட்சியினர் இரு பிரிவாக செயல்படுகின்றனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பிரதமராக ஒவ்வொரு தொண்டர்களும் வேலை செய்கின்றனர். பா.ஜ., கட்சியை சேர்ந்தவரை போல் பிரதமர் மோடிக்கு நிகர் யாருமில்லை என எம்.பி., கார்த்தி கூறியுள்ளார். அவரை கட்சியை விட்டு நீக்காவிட்டால் மாவட்ட முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றார். சிவகங்கை மாவட்ட பொருளாளர் பழனியப்பன்