சில மாதங்களுக்கு டிக்டாக் உட்பட 58 சீன நிறுவனத்தின் மொபைல் செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில்.தற்போது இளைஞர்களின் முக்கிய பொழுதுபோக்கு செயலியான பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. சில மாதங்களுக்கு முன்னர் லடாக்கில் ஏற்பட்ட இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதல் காரணமாக 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.இந்தியாவின் பதிலடியால் சீனாவின் தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டது. இருப்பினும் அதை சீனா மறைத்தது.
இந்நிலையில் சீனாவின் இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் சீனாவை சேர்ந்த டிக்டாக் உள்ளிட்ட 58 செயலிகளை பயன்படுத்த தடைவித்திருந்தது மத்திய அரசு.இதனைத் தொடர்ந்து பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்து அதிரடி காட்டியது மத்திய அரசு. இதனை சற்றும் எதிர்பார்க்காத சீனா மற்றும் பப்ஜி நிறுவனம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்த நிலையில் சீன நிறுவனம் டென்சென்ட்டுடன் கொண்டிருக்கும் அனைத்து தொழில்முறை உறவுகளையும் ரத்து செய்வதாக பப்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு மதிப்பளித்து, சீனாவின் டென்சென்ட் கேம்ஸ் நிறுவனத்தால் பப்ஜி செயலி இனி கட்டுப்படுத்தப்படாது என்றும் துணை நிறுவனங்களின் முழு பொறுப்பையும் பப்ஜி கார்பரேஷனே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு, சட்ட விதிகளுக்கும் ஒழுங்குமுறைகளுக்கும் உட்பட்டு கேமர்கள் மீண்டும் ஆன்லைன் களத்தில் விளையாடுவதற்கு தேவையான தீர்வை எட்டுவோம் என்றும் தென்கொரிய நிறுவனமான பப்ஜி தெரிவித்துள்ளது.
எல்லையில் மட்டுமல்ல அனைத்து விஷயங்களிலும் சீனாவை திறம்பட கையாண்டு வருகிறது மத்திய மோடி அரசு.சீனாவிற்கு கேப் கிடைக்கும் இடமெல்லாம் ஆப்பு வைக்கிறார் மோடி!!