தமிழக இந்து சமய அறநிலையத்துறை கோயில் நகைகளை உருக்க தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என பா.ஜ. முன்னாள் தேசிய செயலர் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்கள் பேசியதாவது : தமிழகத்தில் உள்ள இந்து மக்களின் தற்போதைய நிலையை தோலுரித்து காட்டியுள்ளது ருத்ரதாண்டவம் படம்.
ருத்ரதாண்டவம் படத்தை திட்டமிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றர்கள். இந்து சமய அறநிலையத்துறை நிதியிலிருந்து கல்லுாரிகள் கட்டபடும் என்கிறார் அமைச்சர் சேகர்பாபு. அவ்வாறு செய்தால் இந்து மத வழிபாடு குறித்த பாடம் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்என்று நீதிமன்றத்தின் கருத்து. அதை தமிழக அரசு செயல்படுத்துமா.
கோயில் நகைகளை உருக்கக்கூடாது என்று, விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். அறநிலையத்துறை சிறப்பாக செயல்படவும், தமிழகத்தில் காணாமல் போன 8000 கோயில்களை மீட்டெடுப்பதற்கு அமைச்சர் சேகர்பாபுவை நான் சந்திக்க தயார்.
மத்திய மாநில அரசுகள் இணக்கமாக இருந்தால் தான் பல்வேறு திட்டங்கள் மாநில அரசுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.