தொண்டாமுத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலினையும், திமுகவையும் விரட்டி விரட்டி வெளுத்துள்ளது அதிமுக தரப்பு. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ”திமுகவுக்கு ஏழரை ஆரம்பித்துவிட்டது. கருணாநிதிக்கு கடன் பிரச்னை கழுத்தை நெரித்தது. கோபாலபுரம் வீடே அவரது கையை விட்டுப் போவது போலிருந்தது. அவரது கடனை அடைக்க எம்.ஜி.ஆர். நடித்து உதவினார். இதுதான் வரலாறு. கடனிலிருந்து மீண்ட கருணாநிதியின் குடும்பம் இன்று மிக மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் வரிசையில் உள்ளது. இது எப்படி சாத்தியமென்றால் எல்லாமே ஊழல் பணம். ஊழல் பணம். ஸ்டாலின் நடத்திய கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண் விரட்டியடிக்கப்பட்டுள்ளார். திமுகவுக்கு ஏழரை துவங்கிவிட்டது. அதனால்தான் அவர் தொண்டாமுத்தூருக்கு வந்து வம்பிழுத்துள்ளார். திமுகவின் கதையை இந்த தேர்தலோடு மக்கள் முடித்து, அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும். இந்துக் கடவுள்களை பழித்துவிட்டு, இந்துக்களிடமே ஓட்டுக்களை வாங்குவதற்கு நாடகமாடி வருகிறது திமுக. மக்கள் ஏமாந்துவிடக்குடாது.” என்று விளாசித் தள்ளினார். இதே கூட்டத்தில் பேசிய அதிமுகவின் துணை கொள்கை பரப்புச் செயலாளர் விந்தியாவோ ”மக்கள் கிராமசபை கூட்டத்தை நடத்துவதென்றால் அங்கே மக்கள்தானே இருக்க வேண்டும். அம்மக்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்வதுதானே ஸ்டாலினின் கடமை. ஆனால் தன் கட்சிக்காரர்களை கொண்டு வந்து உட்கார வைத்துக் கொண்டு மக்கள் கிராம சபை! என்று அதை சொன்னால் எப்படி ஏற்க முடியும்? கேள்விகேட்ட பெண்ணை அடித்து விரட்டியதன் மூலம் ஸ்டாலினின் தைரியம் புரிந்துவிட்டது. இவரெல்லாம் முதல்வராகவே முடியாது என்று அவரது அண்ணன் அழகிரியே சொல்லிவிட்டார். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி, ஆட்சியான திமுகவுக்கு ஊழல் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.” என்று ஆவேசம் காட்டினார். ஆக மொத்தமா சேர்ந்து முடிச்சுட்டாங்க!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை (6-ஆம் தேதி) நடைபெறும் நிகழ்ச்சியில் AIIM என்ற மதவெறி கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி பங்கேற்கிறார் என்று திமுக...
கிராம சபை கூட்டத்தில் பெண் மீது தாக்குதல் நடத்த துணையாக இருந்த ஸ்டாலினுக்கு தலைவராக இருக்க தகுதியே இல்லை என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம்...
மதுரையில் உள்ள பாண்டி கோவில் அருகே துவாராக பேலஸில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். முதலில் தனது உரையை ஆரம்பித்த...
இதயங்களை இணைப்போம் என்கிற பெயரில் சென்னையில் வருகின்ற 6 ம்தேதி திமுகவின் சிறுபான்மை அணி சார்பில் நடத்த இருக்கும் மாநாட்டில் கலந்து கொள்ள அசாதுதீன் உவைசிக்கு அழைப்பு...
பிரசாந்த் கிஷோருக்கு இப்பொழுது நே ரம் சரியில்லை என்றே நான் நினைக்கி றேன்.அதனால் தான் மேற்கு வங்காள த்தில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து வெளியேறும் எம்எல்ஏக்கள் அவரையே...
இப்போது கொழுந்துவிட்டு எரியும் பிரச்சாரம் பாஜகவுக்கு நஷ்டம் என்றும்நடக்கும் விவாதம் பாஜக தூண்டியது என்பதும் எது உண்மை? ரஜினியை தூண்டியது பாஜக என்றால்ரஜினியின் withdrawal முடிவைபாஜகவால் தடுத்திருக்க...
தமிழக அரசியலில் 100 ஆண்டுகளாக கோலோச்சி வரும் திராவிட அரசியல் முடிவுக்கு வரும் நேரம் நெருங்கி வருகி றது என்றே கூறலாம். இந்த தேர்தலில் திமுக தோற்கடிக்கப்படும்...
இந்திய கிரக்கெட்அணியின் முன்னாள் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் இன்று பாஜக கட்சியில் இணைந்தார். கடந்த 1983-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் அறிமுகமானவர்...
அதிகாரியை அடுத்து வரும் பானர்ஜி.... படத்தில் இருப்பவரை பார்த்தவுடன் 1983ல் உலகக்கோப்பை கிரிக்கெட் கோப்பையை கைப்பற்றிய கபில் தேவ் நினைவு க்கு வருகிறார் அல்லவா.இவரும் ஒருவிளையாட்டு வீரர்...