தற்போது சீன மற்றும் இந்திய எல்லை பிரச்சனை ராணுவ வீரர்களின் மோதல் என நடந்து கொண்டிருக்கும் வேளையில் நாட்டிற்குள் இருந்து கொண்டே இந்தியாவை துண்டாட நினைக்கும் தேசவிரோதிகளுடன்...
எல்லைப்பகுதியில் இந்திய சீன வீரர்க ளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் 43 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.பல் சீன வீரர்கள் காயம் அடைந் துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன....
எல்லைப்பகுதியில் இந்திய சீன வீரர்க ளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் 43 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.பல சீன வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்திய வீரர்கள்...
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா ரஷ்யா பிரிட்டன் சீனா பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. பிராந்தியங்களின் அடிப்படையில் 10 நாடுகள் தற்காலிக...
கடந்த 24 மணி நேரத்தில், 10,215 கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மொத்தம் 1,80,012 நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 52.47 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கொவிட்-19 தொற்று...
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா தோற்று மிக தீவிரமாக பரவி...
லடாக் எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன இடையே நடந்த தீடிர் மோதலில் இருதரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும்,...
தேசிய பேரிடர் காலங்களுக்கு உதவதற்காக பிரதமர் நிவாரண நிதி என்று அமைப்பு இருக்கும்போது பி.எம்.கேர் என்று புதிதாக ஏன் ஒரு அமைப்பை உருவாக்கி அதில் நிதி திரட்ட...
கடந்த சில நாட்களாக எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறுவதும் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்துவதும் அதிகமாக இருக்கின்றது. பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று 10 ராணுவ முகாம்களை அழித்தது...
ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக, சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய அரசு, பல்வேறு தொகுப்பு உதவிகளை அறிவித்துள்ளது. இது தவிர, தொழில்துறையினரின் பல்வேறு பிரிவினருக்கும், ஏராளமான நிதியுதவித் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், கடந்த வியாழக்கிழமை வரை, பொதுத்துறை வங்கிகள் ரூ.29,490.81 கோடி அளவிற்கு கடனுதவி அளிக்க அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அனுமதிக்கப்பட்ட கடன் தொகையில், ரூ.14,690,84 கோடி அளவிற்கு ஏற்கனவே பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் இதுவரை அனுமதிக்கப்பட்ட ரூ.3,112.63 கோடியில், 46,390 குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,936,68 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. கோவிட்-19 ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கும், தொழிலுக்கு புத்துயிரூட்டவும், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி தேவைப்பட்டது. விவசாயம், கல்வி, தொழில்துறையினருக்கு வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டதுடன், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதிலும், பொதுத்துறை வங்கிகள் பெரும் பங்கு வகித்தன.மாவட்டத்தில், முன்னோடித் தொழில் துறையினருக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், நடைபெற்ற வங்கிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், 2020/21 நிதியாண்டில் ரூ.2,484கோடி அளவிற்குக் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதில், விவசாயம் மற்றும் பயிர்க் கடனாக ரூ.2,334.98 கோடி அளவிற்கும், சிறு மற்றும் குறுந்தொழில் துறையினருக்கு ரூ.41.59 கோடியும், கல்விக் கடனாக ரூ.26 கோடியும், வீடு கட்டுவதற்கான கடனுதவியாக ரூ.31கோடியும், இதர முன்னுரிமைத் திட்டங்களுக்கு ரூ.41.08கோடி அளவிற்கும் கடன் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.நிதிநெருக்கடிகளிலிருந்து மீண்டுவர மக்கள் தனிநபர் கடனுதவி பெறுவதற்கோ அல்லது சிறுதொழில் அல்லது வர்த்தகத்தைத் தொடங்க கடனுதவி பெற உதவுவதன் மூலம், வங்கிகள், சமுதாயத்தின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழ்கின்றன. நிலையான வருமானம் இல்லாததால், வங்கிக்கடன் பெற்றவர்கள், ஊரடங்கு காலத்தில் கடனைத் திருபபிச் செலுத்துவது, மிகுந்த சிரமமான காரியமாக இருந்தது. வங்கிக்கடன் பெற்றவர்கள், அதனை திருப்பிச் செலுத்த செப்டம்பர் மாதம் அவரை அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ள போதிலும், கடனுதவி பெற்றவர்களில் பெரும்பாலானோர், கடன் தவணைகளுக்கு சலுகை காலத்தில் கூடுதல் வட்டி விதிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர். கோவிட்-19 ஊரடங்கு காரணமாக, வேலையின்றி இருப்பதாகக் கூறும் பாளையம் கரூர் பகுதியைச் சேர்ந்த திருமதி.வசந்தா, இந்தக் காலகட்டத்தில், மீண்டும் தொழில் தொடங்க ஏதுவாக கடனுதவி வழங்கியதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கடனுதவிகளை திரும்பச் செலுத்துவதற்கான அவகாசம், முதலில் மூன்று மாதங்களும், அதன்பிறகு, செப்டம்பர் வரை மேலும் மூன்று மாதங்களும் நீட்டிக்கப்பட்டிருப்பதை கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த திரு.சிவகுமார், அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். வங்கியில் பெற்ற கடனுதவி மூலம், குளித்தலையில் முடிதிருத்தகம் நடத்தி வருவதாகக் கூறும் திரு.சிவகுமார், ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், நோய்த்தொற்று பரவக்கூடும் என்ற அச்சம் காரணமாக, போதிய அளவிற்கு வாடிக்கையாளர்கள் வராததால், உரிய வருமானம் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கிறார்.மாவட்டம் பரளி கிராமத்தைச் சேர்ந்த திரு.மாணிக்கம் கூறுகையில், தொழிலை மேம்படுத்த வங்கிக் கடனுதவி பெற்ற தமக்கு, அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த ஆறு மாத காலம் அவகாசம் அளித்திருப்பதை வரவேற்றுள்ளார். இதேபோன்று, ஊரடங்கு காரணமாக, தாமும், தமது கணவரும் உரிய வேலை கிடைக்காமல் தவித்த நிலையில், சுய உதவிக் குழு மூலம் கடனுதவி வழங்கியது, நெருக்கடியான காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு உதவியதற்காக, பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி.செல்லக்கண்ணு, மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மாவட்டம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த திரு.விஜய், வங்கிக் கடனுதவி பெற்று மளிகைக் கடை தொடங்கியுள்ளார். வியாபாரம் சீரடையும் போது தான் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தப் போவதாகவும் அவர் கூறுகிறார். தற்போது மிகக் குறைந்த வருமானமே கிடைத்து வருவதால், வங்கிக் கடனுக்கான வட்டித்தொகையை செலுத்துவது மிகுந்த சிரமமான காரியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.பெருந்தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் மக்கள், தாங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு, நிதியுதவி மற்றும் கடனுதவி தேவை என்றும் கருதுகின்றனர். வர்த்தகம், வியாபாரம் அல்லது தனிநபர் வாழ்வாதாரமாக இருந்தாலும் சரி, பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்ட, வங்கிகளின் ஒத்துழைப்பு அல்லது பிற வகையான உதவிகள் தேவைப்படுகிறது. மத்திய அரசும், நாட்டின் பொருளாதார நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதுடன், மக்களும் தொழில் துறையினரும் நெருக்கடியிலிருந்து மீண்டுவருவதற்காக, தக்க நேரத்தில், சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம், பல்வேறு சிறப்புத் தொகுப்புத் திட்டங்களை அறிவித்து வருகிறது. *