Saturday, June 14, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

கிரிக்கெட் உலகில் அதிக ரசிகர்களைக் கொண்டவர் தல தோனி, ஓய்வு குறித்த அறிவிப்பால் ரசிகர்கள் சோகம்

Oredesam by Oredesam
August 16, 2020
in இந்தியா, விளையாட்டு
0
கிரிக்கெட் உலகில் அதிக ரசிகர்களைக் கொண்டவர் தல தோனி, ஓய்வு குறித்த  அறிவிப்பால் ரசிகர்கள் சோகம்
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம் எஸ் தோனி, அவரின் 2வது சொந்த ஊரான சென்னை மண்ணில் அறிவித்துள்ளார். கிரிக்கெட் மைதானங்கள் மட்டுமல்லாமல் சமூகவலைத்தளங்களில் தோனிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. எம்.எஸ்.தோனி, கேப்டன் கூல், தல, எம்எஸ்டி, மாஹி என ரசிகர்களால் வெவ்வேறு பெயர்களால் அவர் அழைக்கப்பட்டார். ஆரம்பத்தில் நீண்ட முடி ,அதிரடி பேட்டிங், ஹெலிகாப்டர் ஷாட் , மிகவும் விரைவாக ஓடி ரன்கள் எடுப்பது என தோனிக்கு நிறைய அடையாளங்கள் இருந்ததால் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டார்.

ஆரம்பத்தில் நீண்ட முடியுடன்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தாலும் அவருடைய சாதனைகள் என்றும் வரலாற்றில் இடம் பிடித்து இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான உலகக் கோப்பைகளை தங்கள் அணிக்காக பெற்று தந்த ஒரே கேப்டன் எம் எஸ் டோனி மட்டும் தான். கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என இவர் இடத்தை பூர்த்தி செய்வதற்கு இனி ஒருவர் பிறந்து தான் வர வேண்டும்.

READ ALSO

அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash

விமான விபத்து துல்லியமாக கணித்த ஜோதிடர்..சொல்லி ஒருவாரத்தில் நடந்த துயர சம்பவம்! இணையவாசிகள் அதிர்ச்சி!

2007-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 உலகக் கோப்பை, 2011-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷில் நடந்த ஒரு நாள் உலகக் கோப்பை, 2013 -ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஐசிசி சாம்பயின் டிராபி என ஐசிசி-யின் மூன்று கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றவர் எம் எஸ் தோனி.

மூன்று வகையான கோப்பைகளுடன்

எம் எஸ் தோனி 84 ஒரு நாள் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்து உள்ளார். இதற்கு முன் தென்னாப்பிரிக்கா அணியின் ஆல் ரவுண்டர் ஷான் பொல்லாக் 72 போட்டிகளில் ஆட்டமிழக்கமால் இருந்தார். தோனி விளையாடிய 51 ஒருநாள் போட்டிகளில் இலக்கை நோக்கி விளையாடிய போது 47 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் டிராவிலும், 2 போட்டிகள் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. எம் எஸ் தோனி அதிக ஒரு நாள் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்து உள்ளார்.

ஸ்டெம்பிங் செய்யும்போது

எம்.எஸ்.தோனி கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு உள்ளார். அவர் கீப்பிங் செய்யும் போது பேட்ஸ்மேன்கள் கிரீஸில் அச்சத்துடன் இருப்பார்கள். 350 சர்வதேச போட்டிகளில் 123 ஸ்டெம்பிங் செய்துள்ளார் தோனி, இவருக்கு அடுத்துப்படியாக தென்னாப்பிரிக்காவின் பௌச்சர், ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் உள்ளார்கள்.

Your contribution to Indian cricket has been immense, @msdhoni. Winning the 2011 World Cup together has been the best moment of my life. Wishing you and your family all the very best for your 2nd innings. pic.twitter.com/5lRYyPFXcp

— Sachin Tendulkar (@sachin_rt) August 15, 2020

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் “இந்திய கிரிக்கெட்டுக்கு நீங்கள் செய்த சாதனை மகத்தானது தோனி. நாம் இருவரும் இணைந்து 2011 உலகக் கோப்பையை வென்றது என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இரண்டாவது இன்னிங்ஸ்க்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் ஐபிஎல் தொடர்களிலும் தோனியின் வெற்றி பயணம் தொடர்ந்தது. 2010, 2011 மற்றும் 2018 ஆகிய மூன்று ஐபிஎல் தொடர்களை அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வென்றது. இதுமட்டுமில்லாமல் 2008, 2012, 2013, 2015, 2019 ஆகிய ஐந்து ஐபிஎல் தொடர்களில் இறுதி போட்டியில் தோல்வியடைந்தது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நடந்த அணைத்து தொடர்களிலும் அரையிறுதிக்கு நுழைந்த ஒரே அணி எம்.எஸ்.தோனி தலைமையிலான சிஎஸ்கே மட்டும் தான்.

2010,2011,2018 ஐபிஎல் கோப்பையுடன்

டிஆர் எஸ் (டெசிஷன் ரிவியூ சிஸ்டம் ) களத்தில் இருக்கும் நடுவர்கள் அவுட் கொடுத்தாலும் , வீரர்களின் டிஆர்எஸ் மூலம், களத்தில் இருக்கும் நடுவர் மூன்றாவது நடுவரை ஆலோசித்து முடிவை மாற்றலாம் . முதல் முறையாக கிரிக்கெட்டில் 2009 இல் பயன்படுத்தப்பட்டது . எம் எஸ் தோனி டி ஆர் எஸ் மதிப்பாய்வில் 95% வெற்றி பெற்றுள்ளார். நடுவரின் தீர்ப்புக்கு எதிராக டிஆர்எஸ் எடுப்பதிலும் ராஜாவாக திகழ்ந்துள்ளார்.

டி ஆர் எஸ் எடுக்கும்போது

எம் எஸ் தோனி கடைசியாக 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடியிருந்தார். அதன்பிறகு, இந்திய அணியில் தோனி விளையாடவில்லை. கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல்2020 தொடர் தள்ளிப்போகியுள்ள நிலையில், தற்போது ஐபிஎல் 2020 13வது தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறயுள்ளது. அவர் ஓய்வில் இருந்து வந்த நிலையில், ஐ.பி.எல் தொடரில் அவரைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

ShareTweetSendShare

Related Posts

🔴 ஏர் இந்தியா விமான விபத்து – 133 பேர் இறந்ததாக தகவல் ! இதுவரை உள்ள தகவல்கள்
இந்தியா

அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash

June 14, 2025
ArtOfPrediction
இந்தியா

விமான விபத்து துல்லியமாக கணித்த ஜோதிடர்..சொல்லி ஒருவாரத்தில் நடந்த துயர சம்பவம்! இணையவாசிகள் அதிர்ச்சி!

June 13, 2025
Modi
இந்தியா

மோடி 3.0 ஓராண்டு நிறைவு: நக்சல் வேட்டை.. தொடரும் நலத் திட்டங்கள் அனைத்துறைகளிலும் அபரிமிதமான வளர்ச்சி!

June 10, 2025
இந்தியாவிற்கு வென்டிலேட்டர்கள் இலவசம்  அமெரிக்க அதிபர்  டிரம்ப்
இந்தியா

இந்தியாவை பகைத்து அமெரிக்காவுக்கு விழுந்த பேரிடி.. அதிபர் பதவி காலி! .டிரம்பிற்கு அமெரிக்கா உள்ளேயே எழுந்த 2 பிரச்சனை.. போச்சு

June 10, 2025
Sindu River
இந்தியா

ப்ளீஸ்.. சிந்து நதி நீரை திறந்து விடுங்க.. பட்டினி கிடந்தே நாம் சாக போகிறோம்.. ஏதாவது செய்யுங்க..இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்!

June 8, 2025
chenap bridge
இந்தியா

செனாப் பாலம் 17 ஆண்டுகளாக களத்தில் களமாடிய பெண் சிங்கம் மாதவி லதா யார்..? உலக நாடுகள் தேடும் இந்தியாவின் இரும்பு பெண்மணி!

June 8, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

என்ன முதல்வரே இப்படி பண்ணலாமா…மாத்தி மாத்தி பேசலாமா…. அண்ணாமலை VS ஸ்டாலின் அதிரடி அரசியல்

முதல்வரே மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை மறைத்து ஸ்டிக்கர் ஓட்டவேண்டாம்-அண்ணாமலை அதிரடி !

December 23, 2021
மோடி அரசு மக்கள் நலனை காக்க ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் விலை 54 சதவீதம் வரை குறைப்பு.

79ஆவது மனதின் குரல் பிரதமர் மோடியின் உரை.

July 25, 2021
இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த பிரதமரின் புதிய திட்டம் அறிமுகம்.

மோடி தலைமையிலான அரசு கல்வி முறையில் செம்மொழி தமிழ் வளர்ச்சிக்கான பணி தீவிரம் .

August 3, 2021

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரே இடத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டு அமித்ஷாவை வரவேற்றனர்…

December 21, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.
  • 3ம் உலகப்போர் தொடங்கிவிட்டதா .. இனி தடுக்கவே முடியாது? என்ன நடக்கிறது உலக அரசியலில்?’
  • அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash
  • மொசாத்… கதையல்ல நிஜம்… ஈரானின் அணு ஆயுத திட்டத்தையே காலி செய்தது இஸ்ரேல் ? பின்னணி என்ன?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x