Get real time update about this post category directly on your device, subscribe now.
ஸ்டார்ட் அப் இந்தியா நடவடிக்கையின் கீழ் தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 26,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு...
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். நீட்...
அடுத்த வருடம் பிப்ரவரியில் உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தல் நடைபெற இரு க்கிறது இதற்கான முதல் கருத்து கணி ப்பு வெளியாகி இருக்கிறது. இதன்படி பிஜேபிக்கு 265...
தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி மதிப்பில் கடனுடன் கூடிய மானிய உதவியின் மூலம் 2 லட்சம் சிறிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் உருவாக்கப்படும் / மேம்படுத்தப்படும் என மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் திரு. பிரகலாத் சிங்டேல் கூறியுள்ளார். அவர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: மத்திய அரசு திட்டமான பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டத்தின் (PMFME) கீழ், இந்த நிதி நிறுவனங்களுக்கு நிதி, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும், பிரதமரின் கிசான் சம்பதா திட்டத்தையும், உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் 2016-17ம் ஆண்டு முதல் அமல்படுத்தி வருகிறது. இதன் மூலம் வேளாண் பொருட்கள் பதப்படுத்தப்பட்டு விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் கிசான் சம்பதான் திட்டத்தின் கீழ் உள்ள துணை திட்டங்கள்: (i) மிகப் பெரிய உணவு பூங்கா (ii) ஒருங்கிணைந்த குளிர்பதனக் கிடங்கு மற்றும் மதிப்பு கூட்டு கட்டமைப்பு (iii) உணவு பதப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு திறன்கள் உருவாக்கம் / விஸ்தரிப்பு (iv) வேளாண் பதப்படுத்தும் தொகுப்புக்களுக்கான கட்டமைப்பு (v) பிற்படுத்தப்பட்ட மற்றும் முற்படுத்தப்பட்ட இணைப்புகள் உருவாக்கம் (vi) உணவு பாதுகாப்பு மற்றும் தர உறுதி கட்டமைப்பு (vii) மனிதவளம் மற்றும் நிறுவனங்கள் (viii) பசுமை செயல்பாடுகள். இந்த துணை திட்டங்களின் கீழ் கடனுடன் தொடர்புடைய நிதி உதவியை (மூலதன மானியம்) உணவு மற்றும் பதப்படுத்துதல் துறை அமைச்சகம் வழங்குகிறது. இதுவரை 41 மிகப் பெரிய உணவு பூங்காக்கள், 353 குளிர் பதன கிடங்குகள், 63 வேளாண் பதப்படுத்தும் தொகுப்புகள், 292 உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், 6 பசுமை செயல்பாடு திட்டங்களுக்கு உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ரூ.5,792 கோடி மானியத்துடன் தனியார் துறையின் 792 உணவு பதப்படுத்தும் திட்டங்கள் தொடக்கம்: இதுவரை 818 உணவு பதப்படுத்தும் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 792 திட்டங்கள் தனியார் துறைகளைச் சேர்ந்தது. இதற்காக ரூ.5,792 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் 3 முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது. உணவு பதப்படுத்துல் துறையில் ரூ.10,900 கோடி மதிப்பில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது சர்வதேச சந்தையில் இந்திய உணவு பொருட்களின் விற்பனைக்கு உதவும். தனியார் சிறு உணவு நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், விவசாய உற்பத்தியாளர் சங்கங்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு உதவ பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டத்தை உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் அமல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி மதிப்பில் 2 லட்சம் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் அமைக்கப்படும். மூன்றாவதாக பசுமை செயல்பாடுகள் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைகிழங்கு மட்டும் இத்திட்டத்தின் கீழ் இருந்தது. தற்போது இது விரைவில் அழியக்கூடிய 22 வேளாண் பொருட்களுக்கு நீட்டிக்கப்படும் என 2021-22ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்தது. மிகப் பெரிய உணவு பூங்கா திட்டம் குறித்து மதிப்பீடு:...
மூன்று நாளில் இரண்டாவது முறையாக புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணையை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணையை...
இந்தியாவின் பிரபல பத்திரிக்கையான மத்திய பிரதேசத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் தைனிக் பாஸ்கர் நாளிதழ் 12 மாநிலங்களில் 65 பதிப்புகள், 211 துணை பதிப்புகளை...
தமிழகத்தில் பா.ஜ.கவை வலுப்படுத்த தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக பாஜகவிற்கு புதிய இளம் தலைவர் அண்ணாமலை முன்னாள் மாநில தலைவர் எல்.முருகன் அவர்களுக்கு மத்திய...
"பாடப் புத்தகங்களில் இருக்கும் வரலாற்று பிழைகளை சரிசெய்வதா?. கூடாது" என 'வரலாற்றுப் பிழைகளை' புத்தகங்களில் கொண்டுவந்த ரொமிலா தாப்பர் ஆய்வாளர் மத்திய அரசுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளது.2019...
மத்திய அமைச்சரவை மாற்றம் முடிந்து பரபரப்புகள் ஓய்ந்துள்ள நிலையில் இப்பொழுது உத்தரபிரதேச அமைச்சரவை மாற்றம் குறித்த பரபரப்புகள் ஆரம்பமாகிவிட்டது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும்...
கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து வலது சாரி சிந்தனையாளர் விஜகுமார் அருணகிரி அவர்களின் பதிவு: எடியூரப்பாவுக்கு அடுத்து முதல்வர் யார்என்று கர்நாடக மீடியாக்கள் விவாத ம் நடத்தி...
