இந்தியா

Get real time update about this post category directly on your device, subscribe now.

சீனாவின் எல்லைகுள்ளே  சென்று மிரட்டிய இந்திய ராணுவம் !கதறும் சீனா!

சீனா பாகிஸ்தானுக்கு அடுத்த ஆப்பு ஜோசிலா சுரங்கப்பாதை பணியை தொடங்கும் மோடியரசு.

சீனா பாகிஸ்தானுக்கு அடுத்த அப்பு ஜோசிலா சுரங்கப்பாதை பணியை தொடங்கும் மோடியரசு. மோடியரசு தொடந்து நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்திவருக்கென்றது. இதன் தொடர்ச்சியாக...

மோடி அரசின் அடுத்த அதிரடி கல்வி கொள்கையில் ரூ.5718 கோடியில் புதிய திட்டம்!அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, கீழ்கண்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது: மாநிலங்களுக்கு கற்பித்தல்-கற்றல் மற்றும் முடிவுகளை வலுப்படுத்தும் (ஸ்டார்ஸ்) திட்டத்தை ரூ.5718 கோடி செலவில்அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை...

ரூ.73,000 கோடி ஒதுக்கீடு அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிடும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ரூ.73,000 கோடி ஒதுக்கீடு அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிடும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கொரோனா எதிரான போராட்டத்தில் நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள், நுகர்வோரின் செலவு செய்யும் திறனை அதிகரிக்க 73000 கோடி ரூபாய் அளவிலான திட்டத்தை நிதி அமைச்சர் திருமதி...

கோரேகான் கலவர வழக்கு தலித்துகளையும் முஸ்லிம்களையும் வைத்து மத்திய அரசுக்கு எதிராக சதித்திட்டம் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

கோரேகான் கலவர வழக்கு தலித்துகளையும் முஸ்லிம்களையும் வைத்து மத்திய அரசுக்கு எதிராக சதித்திட்டம் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகே பீமா கோரேகான் என்ற இடத்தில் 2017 டிச., 31ம் தேதி இரு தரப்பினரிடையே கலவரம் ஏற்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தியதில்,...

கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது

சொத்துரிமை ஆவண அட்டை திட்டம் ! பினாமிகளின் அட்டகாசம் கட்டுபடுத்தபடும்

உலக அளவில் மூன்றில் ஒரு பங்கு மக்களே தங்கள் சொத்துகளுக்கு உரிய சட்டபூா்வ ஆவணங்களை வைத்திருக்கிறாா்கள். சொத்துரிமை ஆவணங்களை வைத்திருப்பது ஒரு நாட்டின் வளா்ச்சியில் மிகப்பெரிய அளவில்...

கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது

கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது

பட்டா வழங்கும் திட்டத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்து, இந்தத் திட்டம் குறித்து  பயனாளிகளுடன் உரையாடினார். சொத்து விவர அட்டைகள் கிடைக்கப்பெற்ற பயனாளிகளுக்குப் பிரதமர்  வாழ்த்து தெரிவித்தார். அவர்களது வீடு அவர்களுக்கு சொந்தமானது என்பதை சட்டபூர்வமான ஆவணத்துடன் நிரூபிக்கும் உரிமையை, பயனாளிகள் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டம் நமது கிராமங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தற்சார்பு இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில், கிராமங்களைத் தன்னிறைவு அடையச் செய்யும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பதாக  அவர் கூறினார். ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தராகண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பேருக்கு அவர்களது வீடுகளுக்கான சொத்து விவர அட்டை இன்று வழங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த  மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் இந்த அட்டை வழங்கப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார். திரு ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் திரு நானா ஜி தேஷ்முக் ஆகிய இருபெரும் தலைவர்களின் பிறந்த நாளான இன்று இந்த திட்டம் தொடங்கப்படுவது தமக்கு மகிழ்ச்சியைத் தருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். இந்த இரு தலைவர்களின் பிறந்த நாட்கள் மட்டும் ஒன்றாகக்  கொண்டாடப்படவில்லை என்று தெரிவித்த பிரதமர், அவர்களது போராட்டங்களும் கொள்கைகளும் கூட ஒத்து இருந்தது என்று கூறினார். திரு ஜெயப்பிரகாஷ் நாராயணும்,  திரு நானா ஜி தேஷ்முக்கும்,  ஏழை மற்றும் கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சிக்காக தங்கள் வாழ்நாள் முழுவதும் போராடியதைப் பிரதமர் எடுத்துக் கூறினார். கிராமங்களில் வாழும் மக்களுக்குள் பூசல்கள் ஏற்படும் போது அவர்களால் தங்களையும் தங்களது சமூகத்தையும் வளர்த்துக் கொள்ள இயலாது என்ற திரு நானா ஜியின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த பிரதமர் திரு நரேந்திர மோடி, இது போன்ற வேறுபாடுகளைக் களைய உடைமைத் திட்டம் உதவியாக இருக்கும்  என்று தாம் பெரிதும் நம்புவதாகக் குறிப்பிட்டார். நிலம் மற்றும் வீடுகளின் உரிமை, நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று பிரதமர் கூறினார். தங்களது சொத்திற்கு அடையாளம் கிடைக்கும் போது, குடிமக்களின் தன்னம்பிக்கை உயர்வதுடன், முதலீடுகளுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். சொத்தின் ஆவணங்களின் பேரில் வங்கியிலிருந்து கடன் எளிதாகக் கிடைக்கும் என்றும், வேலைவாய்ப்புக்கான வழிகளும் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் கூறினார். இன்றைய காலகட்டத்தில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே தங்களது சொத்துக்களை முறையாக ஆவணப்படுத்தி  உள்ளதாக அவர் குறிப்பிட்டார். கிராம மக்கள் தங்கள் சொத்துக்களை எளிதில் வாங்கவோ விற்கவோ இந்தத் திட்டம் உதவியாக இருக்கும் என்று அவர் மேலும்தெரிவித்தார்.  இன்று நாட்டில் உள்ள ஏராளமான இளைஞர்கள் தாங்களே சொந்தமாக பணம் ஈட்ட விரும்புவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். இது போன்ற இளைஞர்களுக்கு சொத்து அட்டை வழங்கப்பட்டவுடன் அதனைப் பயன்படுத்தி, அவர்கள் வங்கிகளில் சுலபமாக கடன் பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் உறுதி அளித்தார். ட்ரோன் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள நிலங்கள் குறித்து துல்லியமான விவரங்களைப் பெற முடியும் என்று அவர்  நம்பிக்கை தெரிவித்தார். துல்லியமான ஆதாரங்களின் உதவியுடன் கிராமங்களில் வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்த முடியும் என்றும், இது இந்தத் திட்டத்தின் மற்றொரு பயன் என்றும் அவர் கூறினார். கடந்த ஆறு வருடங்களாக பஞ்சாயத்து முறையை மேம்படுத்த அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை இந்த ஸ்வாமித்வா திட்டம் மேலும் வலுப்படுத்தும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். கிராமப் பஞ்சாயத்துகளை வலுப்படுத்த கடந்த ஆறு ஆண்டுகளில் அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களைப் பட்டியலிட்ட அவர், நகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கு இணையாக கிராமங்களையும் மேம்படுத்த இந்த ஸ்வாமித்வா  திட்டம் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் கடந்த ஆறு ஆண்டுகளில், கிராமங்களில் நீண்ட நாட்களாக நிலவிவந்த  தட்டுப்பாடுகளைக் களையவும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர். சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆறு வருடங்களில் கிராமங்களின் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். வங்கி சேமிப்புக் கணக்கு, மின் இணைப்பு, கழிவறை வசதி, எரிவாயு இணைப்பு, குடிநீர் இணைப்புடன் வீடு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கடந்த 6  வருடங்களில் கிராம மக்களுக்கு செய்து தரப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களையும் கண்ணாடி ஒளியிழை என்று அழைக்கப்படும் ஆப்டிகல் பைபர் இணைப்பின் மூலம் இணைக்கும் முயற்சி துரிதமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். வேளாண் சீர்திருத்தங்கள் குறித்த எதிர்க்கட்சிகளின் வாதத்தை மறுத்து பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, நம் விவசாயிகள் தன்னிறைவு அடைவதில் விருப்பம் இல்லாதவர்கள்தான் இந்தச் சீர்திருத்தங்களை எதிர்க்கின்றனர் என்றார். சிறு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் இடையர்களுக்கு வழங்கப்படும் கிசான் கடன் அட்டையின் மூலம் இடைத்தரகர்களின் சட்டவிரோதமான வருமானம் தடைப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். உரத்திற்கு வேம்பு பூச்சு, விவசாயிகள் பயன் பெறும் வகையில் அவர்களுக்கு உரித்தான பணத்தை நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்துதல் போன்ற முடிவுகளை, விரயமாவதை  பெருமளவில் தடுக்கும் முயற்சிகளாக பட்டியலிட்ட பிரதமர்,  இவ்வாறு குறைபாடுகளை நீக்குவதனால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தான் வேளாண் சீர்திருத்தத்தை எதிர்க்கின்றனர் என்று கூறினார். நாட்டின் முன்னேற்றம் இத்தகைய நபர்களால் தடைபடாது.  கிராமங்களையும் ஏழை மக்களையும் தன்னிறைவு அடைய செய்யும் அரசின் முயற்சிகள் தொடரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.  இந்த இலக்கை அடைய ஸ்வாமித்வா திட்டம் உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதியளித்தார்.

உ.பி காங்கிரஸ்  வேட்பாளர் கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்டவர்! எதிர் கேள்வி கேட்ட பெண் தாக்கப்பட்டார் ! வாய் திறப்பாரா ராகுலும் பிரியங்கவும்!

உ.பி காங்கிரஸ் வேட்பாளர் கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்டவர்! எதிர் கேள்வி கேட்ட பெண் தாக்கப்பட்டார் ! வாய் திறப்பாரா ராகுலும் பிரியங்கவும்!

உத்தரபிரதேசத்தின் தியோரியாவில் இடைத்தேர்தலில் பாலியல் வழக்கில் சிக்கிய காங்கிரஸ்காரருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய காங்கிரஸ் பெண் தொண்டரை, காங்கிரஸ் கட்சியினரே தாக்கிய...

பூசாரி உயிருடன் எரித்து கொலை! கோவில்! நில ஆக்கிரமிப்பை தடுத்ததால் நடந்த கொடூர சம்பவம்!

பூசாரி உயிருடன் எரித்து கொலை! கோவில்! நில ஆக்கிரமிப்பை தடுத்ததால் நடந்த கொடூர சம்பவம்!

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் கோவில் நில ஆக்கிரமிப்பை தட்டிக் கேட்ட கோயில் பூசாரி, உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபோத்ராவில் உள்ள புக்னா...

இந்திய கிராமங்களில் மாற்றத்தை ஏற்படுத்த டிஜிட்டல் பட்டா வழங்கும் பிரதமர் மோடி.இனி பினாமி சொத்துக்கு ஆப்பு!

இந்திய கிராமங்களில் மாற்றத்தை ஏற்படுத்தவும்,  மற்றும் பல லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையிலும் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகளை பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கும் முக்கிய நிகழ்வை பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அக்டோபர் 11-ம்தேதி தொடங்கி வைக்கிறார். மொபைல் போன்கள் வழியே அனுப்பப்படும் குறுஞ்செய்தி இணைப்பின் வழியே சொத்து அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை,  ஒரு லட்சம் சொத்து உடமையாளர்கள் பெறும்  வசதி தொடங்கப்பட உள்ளது. அதன்பின் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் சார்பில்  சொத்து அட்டைகள் நேரடியாக வழங்கப்படும்.  கர்நாடகாவில் 2, உத்தரகாண்ட்டில் 50, மத்தியபிரதேசத்தில் 44, மகாராஷ்டிராவில் 100, ஹரியாணாவில் 221, உத்தர பிரதேசத்தில் 346 என  6 மாநிலங்களின் 763 கிராமங்களைச் சேர்ந்தவர்கள்  இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர்.  மகாராஷ்டிரா மாநிலத்தைத்தவிர மேற்குறிப்பிட்ட இதர மாநிலங்களைச் சேர்ந்த பயனாளிகள் ஒரு நாளுக்குள் சொத்து அட்டைகளை பெறுவார்கள். சொத்து அட்டைகள் வழங்க குறைந்த பட்சத்தொகையை வசூலிக்கும் ஒரு முறையை மகாராஷ்டிரா அரசு தொடங்க உள்ளதால், இந்த திட்டம்அந்த மாநிலத்தில் தொடங்குவதற்கு ஒரு மாதம் ஆகும். கடன் பெறவோ அல்லது இதர நிதி பயன்பாடுகளுக்காகவோ கிராம மக்கள், தங்களது சொத்துகளை,  ஒரு நிதி சொத்தாக உபயோகிப்பதற்கு இந்த நடவடிக்கை  வழி வகுக்கும். தவிர,  பல லட்சக்கணக்கிலான கிராம சொத்து உடமையாளர்கள் பயன் அடையும் வகையில் மிகவும் நவீன முறையிலான தொழில்நுட்பத்துடன் கூடிய இதுபோன்ற பெரிய அளவிலான நடைமுறை  இதுவரை இல்லாத வகையில் முதன் முறையாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிகழ்வின்போது பிரதமர் சில பயனாளிகளுடன் உரையாட உள்ளார். மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சரும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்வு அக்டோபர் 11ம் தேதி காலை 11 மணிக்குத் தொடங்கும்.  மேலும் இந்த டிஜிட்டல் பட்டா முறை இந்தியா முழுவதும் அமல்படுத்தப்டுகிறது. ஏற்கனவே சொத்துக்கள் வாங்குவதற்கும் விற்பதற்கும் ஆதார் அவசியம், இனி அனைத்தும்...

ஆத்மனிர்பர் பாரத் மகாத்மா காந்தியின் தொலை நோக்கு பார்வையான சுதேசி இயக்கமும் கிராமப்புற மறுமலர்ச்சியும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.

ஆத்மனிர்பர் பாரத் மகாத்மா காந்தியின் தொலை நோக்கு பார்வையான சுதேசி இயக்கமும் கிராமப்புற மறுமலர்ச்சியும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.

தன்னிறைவு கொண்ட சமுதாயத்தை உருவாக்க மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் முழுமூச்சுடன் செயல்படுத்தப்பட வேண்டும்  என்று காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக  துணைவேந்தர் டாக்டர் பி சுப்புராஜ் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில்,  மகாத்மாவின் கனவை நனவாக்குதல் என்ற தலைப்பில் இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மக்கள் தொடர்பு அலுவலகம், வேலூர் மற்றும் பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை இணைந்து நடத்திய இணைய கருத்தரங்கில் அவர் இதனைத் தெரிவித்தார். ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு, பதினாறாம் நூற்றாண்டு வரை தன்னிறைவடைந்த நாடாகவே இந்தியா இருந்தது என்று கூறிய அவர், சிலப்பதிகாரம் உள்ளிட்ட எந்த ஒரு நூலிலும் பட்டினி,  கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெற்றதாகக் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்தார். பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் தொழிற்புரட்சியைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு காலனிகளில் இருந்து கச்சாப் பொருட்களை இறக்குமதி செய்து அவர்களுக்கு தயாரித்த பொருட்களை விற்றார்கள். அது முதற்கொண்டு தன்னிறைவு சமுதாயமாக இருந்த இந்தியா ஆங்கிலேயர்களையும் மேற்கத்திய நாடுகளையும் சார்ந்திருக்கத் தொடங்கியது என்றும் அவர் மேலும் கூறினார். ஆங்கிலேயரின் இந்தப் போக்கு காந்தியை வெகுண்டெழச்செய்தது. அவர் இந்தியனாய் இரு, இந்திய பொருட்களையே வாங்கு என்ற சுதேசி இயக்கத்தை தொடங்கினார். இதன் காரணமாக ஏராளமான மக்கள் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஆடைகளைத் தீயிட்டுக் கொளுத்தவே, இங்கிலாந்தில் நெசவுத்தொழில் பெரும் பாதிப்படைந்ததாக அவர் தெரிவித்தார் சிறு தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து அவற்றை மேம்படுத்த மத்திய அரசு ஆத்மனிர்பர் பாரத், ஸ்வச்ச் பாரத் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்று துணைவேந்தர் மேலும் கூறினார். நிகழ்ச்சியில் பேசிய காந்திகிராம கிராமிய  பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் டாக்டர் டி. ரவிச்சந்திரன், மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை எடுத்துக்கூறினார். எவ்வளவுதான் சுதந்திரத்திற்காக மகாத்மா காந்தி போராடினாலும் அவர் பதவி ஆசையற்று  இருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார். மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, பராக் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்களும்  காந்திய வழியைப் பின்பற்றுவதாக அவர் தெரிவித்தார். முசோலினியும், காந்தியும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக குரல் கொடுத்தாலும்,  காந்தியின் அகிம்சைப் போராட்டத்தை முசோலினி ஏற்கவில்லை, இதேபோல் ஹிட்லரிடமும் அகிம்சையைக் கடைபிடிக்குமாறு மகாத்மா காந்தி கடிதங்களை எழுதியதாக அவர் மேலும் குறிப்பிட்டார். அனைத்து வயதினரும் மகாத்மாவின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இணைய கருத்தரங்கில் உரையாற்றிய காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தின்  ஊரகத் தொழில் மேலாண்மைத் துறை இயக்குனர் டாக்டர் ஆர் சீரங்கராஜன், தன்னிறைவு கொண்ட சமுதாயத்தை உருவாக்குவது குறித்து கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். மாசற்ற, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் செயல்படும் ஊரகத் தொழில் துறைகளுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆண்டுக்கு குறைந்தது பத்தாயிரம் ரூபாய் அளவிலாவது கதர் ஆடைகளையும் உள்ளூர் மக்கள் தயாரித்த சோப்பு,, மருந்து, எண்ணெய் முதலியவற்றையும் அவர்களிடமிருந்து வாங்குமாறு அவர் வலியுறுத்தினார். முன்னதாக தொடக்க உரை நிகழ்த்திய சென்னை மண்டல பத்திரிக்கை தகவல் அலுவலக இயக்குனர் திரு குருபாபு பலராமன், மகாத்மா காந்தி எளிய வாழ்வு வாழ்ந்தார் என்றும் தொலைநோக்கு பார்வை கொண்டிருந்தார் என்றும் குறிப்பிட்டார். மேலும் அவர் மகாத்மா காந்தியின் அதிகாரப் பங்கீடு, அகிம்சை, பொறுப்புத் தன்மை முதலிய பண்புகள்,  எக்காலத்திற்கும் சமுதாயத்திற்குத் தேவை என்று வலியுறுத்தினார். வரவேற்புரை நிகழ்த்திய சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இணை இயக்குனர் திரு ஜே காமராஜ், காந்திஜி துணிவுடனும், நெஞ்சுறுதியுடனும், செயல்பட்டார் என்றும், அவரது வாழ்க்கை வருங்கால சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக, மறைந்த மத்திய அமைச்சர் திரு ராம் விலாஸ் பஸ்வானின் மறைவிற்கு இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Page 97 of 139 1 96 97 98 139

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x