கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் நிலைமையை எளிதாக்க இந்தியா உறுதி பூண்டுள்ள சமயத்தில், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும், எல்லைக் கோட்டை தாண்டவோ அல்லது துப்பாக்கி சூடு உள்ளிட்ட பதற்றத்தை உண்டாக்கும் செயல்களில் ஈடுபடவோ இந்திய ராணுவம் முயற்சிக்கவில்லை. ஆனால், சீன ராணுவம் ஒப்பந்தங்களை மீறுவதோடு மட்டுமில்லாமல், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ராணுவம், அதிகாரிகள் மற்றும் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இது போன்ற செயல்களில் அது ஈடுபட்டு வருகிறது. சமீப நிகழ்வாக, 2020 செப்டம்பர் 07-ஆம் தேதி அன்று எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் உள்ள நம்முடைய ராணுவ நிலைக்கு அருகில் வந்த சீனப் படைகள் விரட்டியடிக்கப்பட்டன. நமது படைகளை அச்சுறுத்துவதற்காக சீன ராணுவம் வானத்தை நோக்கி சுட்டது. ஆனால், இத்தகைய தூண்டி விடும் போக்குக்கு இடையிலும், நமது படைகள் பொறுமை காத்து, பொறுப்புடன் நடந்து கொண்டன. அமைதியைப் பேண உறுதி பூண்டுள்ள அதே வேளையில், தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்க இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கட்டுரை: எழுத்தாளர் சுந்தர்.
ஒப்பந்தத்தை மீறி எல்லையில் ராணுவத்தைக் குவிக்கக் கூடாது சீனப் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் எச்சரிகை.! மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் கூட்டுறவு நிறுவனக் கூட்டத்துக்கு இடையே, சீன பாதுகாப்பு துறை...
கடந்த சில நாட்களாக ஸ்வீடன் வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதினை பெரும்பாலான இந்தியர்கள் அறிந்திருப்பார்கள். இந்தியாவைப் போல அல்லாமல் ஸ்வீடன் ஒரு பணக்கார ஐரோப்பிய நாடு. இயற்கையழகும், செல்வமும்,...
தேவையில்லாமல் பல முனைகளில் பிரச்சினையைக் கிளப்பியதால் உண்டான சிக்கல் ஒருபுறம், கோவிட் தாக்கம், அதனால் உண்டான பொருளாதார நெருக்கடிகள், விடாத மழையின் காரணமாக அணைகள் நிரம்பி பாதி...
அமெரிக்காவில் நவம்பரில் அதிபர் தேர்தல் நடக்கிறது. அதிபர் ட்ரம்ப் 2-வது முறையாக குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பிடனும் இதே கட்சி...
"அமெரிக்கா, இந்தியா, மற்றும் உலகெங்கும் உள்ள ஹிந்துக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்" என டெமாக்ரட் வேட்பாளர் ஜோ பைடன் ட்வீட். "நானும் வாழ்த்துகிறேன்" என துணை ஜனாதிபதி...
ஆகஸ்ட் ஆரம்பத்தில் நடந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் ( Organisation of Islamic Conference OIC), "காஷ்மீரில் 370 நீக்கத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதற்கு...
இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தவும், வேறுபாடுகளை நிர்வகிக்கவும் ஒருவருக்கொருவர் மதிக்க வேண்டியது சரியான வழி என்று சீன வெளியுறவு அமைச்சகம்...
தலைநகர் டெல்லியில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஹவாலா பரிவர்த்தனைகளில் பண மோசடி மற்றும் போலி சீன நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக லுயோ சாங் என்கிற சார்லி பெங் என்ற...
நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ஆக்லாந்தில் உள்ள ராதா கிருஷ்ணா கோயிலுக்குச் சென்று சாமி தரிசணம் செய்து, பின்னர் இந்திய பாரம்பரிய உணவான பூரி மசால் சாப்பிட்டார்....