மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில் நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி வாயிலாக இன்று (04.02.2021) உரையாற்றினார். இந்திய ரயில்வே தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் குறித்து பேசிய அவர், “2021 நிதிநிலை அறிக்கை, இந்திய ரயில்வேக்கு வரலாற்று சிறப்பு மிக்கதாக விளங்குகிறது. இந்திய ரயில்வேயில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள மூலதன செலவு பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் தற்சார்பு இந்தியாவை நோக்கி இந்திய ரயில்வேயை வழிநடத்தவும் உந்துசக்தியாக இருக்கும்”, என்று கூறினார். இந்திய ரயில்வேயின் மேலாண்மைக்கான தாரக மந்திரம் குறித்து பேசிய திரு கோயல், “முன்னுரிமைகளை வழங்கி, வளங்களை பிரித்தளித்து, திட்டங்களை விரைவாக முடிவடையச் செய்வதே இந்திய ரயில்வேயின் மேலாண்மைக்கான தாரகமந்திரமாகும்”, என்று குறிப்பிட்டார். இந்திய ரயில்வேக்கு 2021-22 நிதிநிலை அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள ரூ. 1,10,055 கோடி தொகையில் ரூ. 1,07,100 கோடி மூலதன செலவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2020-21 நிதிநிலை மதிப்பீடுகளை விட ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு ரூ. 37,050 கோடி (53%) அதிகமாகும். பெருந்தொற்று காலத்திலும் இந்திய ரயில்வேயின் உள்கட்டமைப்பு திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சாத்தியமுள்ள விமான நிறுவனங்களின் மூலம் சிறப்பு நோக்க முகமையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் கடல் விமான சேவையை தொடங்குவதற்கான பணிகளை மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் தொடங்கியுள்ளது. அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் சாகர்மாலா மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். கடல் விமான சேவைகளுக்காக பல்வேறு வழித்தடங்கள் பரிசீலனையில் உள்ளன. அந்தமான் மற்றும் நிக்கோபர், லட்சத்தீவுகள், கவுகாத்தி நதிக்கரை, அசாமில் உள்ள உம்ரான்சோ நீர்த்தேக்கம், யமுனா நதிக்கரை, தில்லியிலிருந்து அயோத்தி வரை, தெஹ்ரி, ஸ்ரீநகர் (உத்தரகாண்ட்), சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு கடல் விமான சேவைகள் திட்டமிடப்படுகின்றன. கேவடியா மற்றும் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி நதிக்கரைக்கு கடல் விமான சேவை ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியால் 2020 அக்டோபர் 31 அன்று இது துவக்கி வைக்கப்பட்டது. இதற்கிடையே, முக்கிய துறைமுகங்களுக்கான தூர்வாருதல் வரைவு வழிகாட்டுதல்கள் மீதான கருத்துகளை மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் வரவேற்றுள்ளது. பங்குதாரர்களுடன் இணைந்து இது தயாரிக்கப்பட்டுள்ளது. http://shipmin.gov.in/sites/default/files/Draft%2520guidelines%2520for%2520comments_compressed.pdf என்னும் முகவரியில் வரைவு வழிகாட்டுதல்களை காணலாம். கருத்துகளை 2021 ஜனவரி 31 வரை anil.pruthi@nic.in என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி, பிரதமர் மோடி தனது சொந்த கைகளால் 7 வது தவணைத் தொகையை விவசாயிகள் கணக்கிற்கு அனுப்பினார், உங்கள் கணக்கில் ரூ.2000...
சல்யூட் டூ தி லீஜியன் ஆப் மெரிட்.- ஒரு நாட்டு ராணுவத்தை சிறப்பாக வழி நடத்தும் ராணுவ தலைவர்களுக்கும் அந்த ராணுவ தலைவர்களையே சிறப்பாக வழி நடத்தி...
"திமுக நாடகம் அம்பலம். திமுக தன் தேர்தல் அறிக்கையில் என்ன விவசாய சீர்திருத்தங்களை கொண்டு வருவோம் என்று சொன்னதோ அதையே மோதி அரசு கொண்டு வந்துள்ளது. பின்னர்...
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஒன்றியம், ஞாலம் ஊராட்சி, அந்தரபுரம் ஊரைச் சார்ந்தவர் பூதலிங்கம்பிள்ளை (வயது 45), திமுக தெரிசனங்கோப்பு ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். தீபாவளி அன்று இவரும்,...
பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் திருச்சி சென்றுள்ளார். உதயநிதிக்கு பூர்ண கும்ப மரியாதை கொடுப்பதற்கு கரியமாணிக்கம் கைலாசநாதர் கோவிலில், திமுக நிர்வாகிகள்...
நட்சத்திர ஓட்டலில் மதுபோதையில் தகராறு செய்ததையடுத்து திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர்...
திருமாவின் பேட்டி ஒன்று கேட்க நேர்ந்தது அன்னார் இந்நாட்டில் தாழ்த்தபட்டவன், கிறிஸ்தவன், இஸ்லாமியன் பிரதமராக முடியாது என சொல்லி கொண்டே இருந்தார். இக்கோஷ்டிகள் அக்காலம் முதல் அப்படித்தான்...
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற நடைமுறையை கடைபிடித்ததால் ரூ1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டது என 2010-ம் ஆண்டு மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி...