Get real time update about this post category directly on your device, subscribe now.
தமிழகத்தில் தங்கநகை கடைகளுக்கு அடுத்து மக்களுக்கு தங்கம் என்றால் நியாபகம் வருவதுபனங்காட்டு படைக் கட்சி தலைவராக இருக்கும் ஹரி நாடார், தான். அவரின் உடல் முழுக்க கிலோ...
கடந்த மாதம் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்தது. ஆண்ட்ரே திமுகவினர் தங்களின் அராஜகத்தை கையில் எடுத்தனர். அம்மா உணவகத்தை தாக்கினார்கள். அம்மா மினி கிளினிக்கள் தாக்கப்பட்டது...
சேப்பாக்கம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி பேரனும் இந்நாள் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அவரை பற்றியும் அவரது...
கடந்த 12 மாதங்களில் 43% இந்தியர்கள், சீன பொருட்களை புறக்கணித்துள்ளனர்!லடாக்கில் (Ladakh) உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் (Galwan Valley) இந்திய மற்றும் சீன படையினருக்கு இடையிலான மோதல்...
1801 ஜூன் 12 ஆம் தேதி மருது சகோதர்கள் திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை ”ஜம்புத்தீவு பிரகடனம்”என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கையின் மூலம் எல்லா இனங்களையும்...
சமூக வலைத்தளங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிகளை மத்திய அரசு வருகுது செயல்படுத்தியது .இந்த ட்விட்டர் மட்டும் பிடிவாதமாக அரசின் சட்ட திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டோம் என ஆடம்...
தமிழகத்தில் சாராய கடைகளை திறந்த ஒரே நாளில் 165 கோடிக்கு சாராயத்தை தமிழ் மக்களுக்கு திமுக அரசு விற்பனை செய்திருக்கிறது. 30 நாள்களுக்கு மேல் ஊரடங்கில் இருக்கும்...
கடந்த திங்கள் அன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடை திமுக அரசால் திறக்கப்பட்டது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக சார்பில் நிர்வாகிகள் அவர் அவரது...
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க மத்திய அரசு ரூ.3,691 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டில் தமிழகத்துக்கான ஒதுக்கீட்டை ரூ.3,691 கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கடந்த 2020-21ம் ஆண்டில் ரூ.921.99 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=xXYdslnBULA ஜல்சக்தி அமைச்சகத்தின் தேசிய ஜல் ஜீவன் திட்டம் தமிழகத்துக்கு முதல் தவணையாக ரூ.614.35 கோடியை வழங்கியுள்ளது. தமிழகத்துக்கு ஜல்ஜீவன் திட்டத்துக்கான ஒதுக்கீட்டை 4 மடங்கு உயர்த்த ஒப்புதல் அளித்துள்ள ஜல்சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங், 2024ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராம வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க தமிழகத்துக்கு முழு உதவியும் அளிக்கப்டும் என உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 1.26 வீடுகளில், 40.36 லட்சம் வீடுகளுக்கு (31.80 சதவீதம்) குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்த திட்டம் தொடங்கியபோது, 21.65 லட்சம் (17.06 சதவீதம்) வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் கடந்த 22 மாதங்களில் 18.70 லட்சம் (14.74 சதவீதம்) வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் 86.53 லட்சம் வீடுகள் குடிநீர் குழாய் இணைப்பு இல்லாமல் உள்ளன. இந்தாண்டில் 16.13 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மீதமுள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது மிகப் பெரிய பணியாக இருக்கும். 2024ம் ஆண்டுக்குள் இந்தப் பணியை முடிக்க, கிராமங்கங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதை தமிழகம் 179 சதவீதம் அதிகரிக்க வேண்டும். இந்தாண்டுக்கான செயல் திட்டத்தை தமிழகம் இன்னும் இறுதி செய்யவில்லை. இதை தாமதிக்காமல் இறுதி செய்யும்படி தமிழக அரசை தேசிய ஜல்ஜீவன் திட்டம் கேட்டுக் கொண்டுள்ளது. https://www.youtube.com/watch?v=zMIbWl1xLhM ஜல்ஜீவன் திட்டம் அமல்படுத்தும் பணியை விரைவுபடுத்தும்படி தமிழக முதல்வருக்கு, ஜல்சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார். 2020-21ம் ஆண்டில் மத்திய அரசு வழங்கிய ரூ.921.99 கோடியில், தமிழகம் ரூ.544.51 கோடியை மட்டும் பயன்படுத்தியது. ரூ.377.48 கோடியை திருப்பி அளித்தது. இந்தாண்டு 4 மடங்கு அதிகமாக ரூ.3,691 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செலவழிக்காத நிலுவைத் தொகையாக ரூ.377.48 கோடி உள்ளது. 2020-21ம் ஆண்டில் மாநிலத்தின் பங்களிப்பு பற்றாக்குறையாக ரூ. 290.79 கோடி உள்ளது. 2021-22ம் ஆண்டில், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க தமிழகத்துக்கு ரூ.8,428.17 கோடி உள்ளது. ஆகையால், இத்திட்டத்துக்கு பணப் பற்றாக்குறை எதுவும் இல்லை. தமிழக முதல்வருக்கு, மத்திய அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டின் மூலம், கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் தமிழகத்தால் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2021-22ம் ஆண்டில், 15வது நிதி ஆணையத்தின் மானியமாக ஊரக உள்ளாட்சி பகுதிகளில் குடிநீர் மற்றும் துப்புரவு பணிக்கு ரூ.1,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.8,436 கோடி உறுதி அளிக்கப்பட்ட நிதி உள்ளது. தமிழக கிராம பகுதிகளில் செய்யப்படும் இந்த மிகப் பெரிய முதலீடு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, கிராம பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்....
வரும் 14 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மறுநாளான 15 ஆம் தேதி முதல் இரண்டாவது தவணையாக ரூ 2,000...
