Get real time update about this post category directly on your device, subscribe now.
கொவிட் 19 வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்வதற்காக, கூடுதல் மருத்துவமனைகள், பரிசோதனை நிலையங்கள், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் ஆகியவற்றை அமைப்பதற்கும், தற்போதுள்ள வசதிகளை விரிவுபடுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும், போதிய நிதி ஆதாரங்களை ஒதுக்குமாறு மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான, உயிர் காக்கும் சுவாச கருவிகள், தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகள், முகக்கவசங்கள், மருந்துகள் போன்ற அனைத்து வசதிகளுடன் இவை அமைக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனோ வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள சூழலில், அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க, சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் (அனைத்து பாஸ்போர்ட் சேவை மையங்கள், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் உள்பட) 2020 மார்ச் 31-ம்தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சென்னை அண்ணா சாலை ராயலா டவர்சில் இயங்கும் பாஸ்போர்ட் அலுவலகத்திலும் தட்கல் கவுண்டர் மற்றும் விசாரணை கவுண்டர்களும் மூடப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு ,பின்வரும் ஆலோசனைகளை அலுவலகம் வழங்கியுள்ளது. பாஸ்போர்ட் சேவை மையங்கள், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம், தட்கல் மையங்களுக்கு வருமாறு ஏற்கனவே அழைப்பு பெற்றவர்கள், தங்களது வருகையை மார்ச் 31-ம் தேதிக்குப் பின்னர் மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.வருகையை மாற்றியமைக்க கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது. இயல்பு நிலை திரும்பும்வரை, எத்தனை முறை வேண்டுமானாலும் , வருகையை மாற்றிக்கொள்ளலாம்.ராயலா டவர்ஸ் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வரவேண்டிய விண்ணப்பதாரர்களும், தங்கள் வருகையை மார்ச் 31-க்குப் பின்னர் வேறு எந்த தேதிக்காவது தள்ளிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.இதுபற்றிய அனைத்து விவரங்களுக்கும் மக்கள் 044- 28513639, 044-28513640 ஆகிய எண்களையோ அல்லது rpo.chennai@mea.sov.in என்ற இணையதளத்திற்கோ தொடர்பு கொள்ளலாம். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதாக, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி திரு. அசோக் பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பாக, கடந்த 19ஆம் தேதி நாட்டு மக்களுடன் உறையற்றினார் பிரதமர் நரேந்திர மோடி அப்போதுநாட்டு மக்கள் அனைவரும் ஒரு நாள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு...
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தாமல் உலகம் முழுவதும் பரப்பியதற்காக உலகிற்கு 20 லட்சம் கோடி டாலர்கள் அபராதம் அளிக்க வேண்டும் சீனா மீது அமெரிக்க...
1) பால் பாக்கெட்டுகளை நன்கு கழுவிய பின் வீட்டிற்குள் கொண்டு வரவும். சாப்பிடும் முன் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவவும். செய்தித்தாள்களை வாங்குவதை நிறுத்திக்கொள்வது நல்லது....
1857-ம் ஆண்டுக்கு முன்பு வரை அயோத்தியில் இந்துக்கள் வழிபடு நடத்தி வந்துள்ளனர் அப்போது எந்த தடையும் இருக்கவில்லை பின சில ஆட்சியாளர்கள் காலத்தில் அங்கு இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்து...
சீனாவில் உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் 'கொரோனா வைரஸ்' இந்த வைரஸை தடுக்க உலக நாடுகள் முழு மூச்சுடன் போராடி வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரசை...
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவானது மார்ச் 31 வரை போடப்பட்டது....
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இதை மக்களும் பரவலாக...
கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வருகிறது இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்...
