கொரோனா தடுப்பு பணிகளுக்கு தமிழகத்திற்கு 800 கோடி வழங்கிய மத்திய அரசு! சொன்னார் தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியன்!

கொரோனா இரண்டாவது அலையை நிர்வகிப்பதற்கும், மாநிலத்தில் மூன்றாவது அலைகளைத் தடுப்பதற்கும் மத்திய அரசு 800 கோடி ரூபாய் நிவாரணப் தொகையை வழங்கியதாக தமிழ்நாடு சுகாதார அமைச்சர் எம்.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

புதுதில்லி சென்றுள்ள தமிழக அமைச்சா் மா.சுப்பிரமணியன் நேற்றைய தினம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் மன்சூக் மாண்டவியாவை அவரது அலுவலத்தில் சந்தித்தாா்.அப்போது தமிழகத்ததிற்கு கூடுதல் தடுப்பூசி வழங்குமாறும், கரோனா நோய்த்தொற்று பேரிடரில் இரண்டாம் அலை பாதிப்புகளுக்கான புனரமைப்புக்கும் மூன்றாம் அலை எதிா்கொள்ள தேவையான தயாா்நிலைக்கும் நிதித்தேவைக்கு தேசிய சுகாதார இயக்கத்திடம் ரூ.1500 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு சமா்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பேரிடா் பாதிப்பு புனரமைப்புக்கும் மூன்றாம் அலைக்கான தயாா் நிலைக்கும் முதல் கட்டமாக ரூ.800 கோடி விடுவிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்ட்வியா ஒப்புக் கொண்டுள்ளதாக தமிழக அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

Exit mobile version