“இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதில் மத்தியஅரசு கவனம்”: பிரதமர் மோடி !

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற அனைத்து முயற்சிகளை செய்து வருகிறோம். இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் நமது அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது’ என பிரதமர் மோடி கூறினார்.லோக்சபா தேர்தலை முன்னிட்டு 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் ரோஜ்கார்’ எனப்படும் திட்டத்தை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது 75 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு வேலைக்கான பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். அதன்படி, இன்று (ஜூன் 13) 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு காணொலி வாயிலாக பணி நியமன ஆணையை பிரதமர் மோடி வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி 43 இடங்களில் மெகா சைஸ் திரையிடப்பட்டன.

70 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்குவது மகிழ்ச்சி. இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற அனைத்து முயற்சிகளை செய்து வருகிறோம். வேலை கிடைத்துள்ள இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு மகிழ்ச்சியான தருணம் இது. வங்கிகளில் உத்தரவாதம் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது.

அரசு வேலைகளில் சேருபவர்களுக்கு இது முக்கியமான நேரம். எனவே அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கை நோக்கி எடுத்துச் செல்வார்கள். இந்தியாவில் அரசியல் ஸ்திரத்தன்மை கொண்டது. அரசியலில் ஊழல், பணத்தை வீணாக செலவிடுதல் ஆகியவை முந்தைய ஆ்டசி காலத்தில் நடந்தது.அரசு வேலைகளில் ஆட்சேர்ப்பு செயல்முறை, முந்தைய காலக்கட்டத்தில் ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை ஆகியது. இப்போது அது வெளிப்படையாக சில மாதங்களில் முடிவடைகிறது. இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் நமது அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

கனவுகளை அடைவதற்கு மொழி ஒரு போதும் தடையாக இருக்கக் கூடாது. பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகள் இளைஞர்களுக்கு திறன்களை காட்ட ஒரு புதிய தளம். உலகின் பெரிய நிறுவனங்கள் உற்பத்திக்காக இந்தியாவை நோக்கி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version