தமிழகத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சந்திக்கும் சவால்கள்….

Annamalai

Annamalai

ஆண்டாண்டு காலமாக சினிமா நடிகர்களை கடவுளாகவும், அவர்கள் சொல்வது தான் வேதவாக்கு என நம்பி கொண்டிருக்கும் தமிழக மக்களின் அறியாமையை பயனப்டுத்தி கோடி கோடியாய் சம்பாதிக்கும் சினிமா நடிகர்கள் இருக்கும் ‘படித்தவர்கள்’ நிறைந்த மாநிலம் தான் தமிழகம்!

இந்த சினிமா நடிகர்கள், அரசின் மீதுள்ள தனிப்பட்ட தங்களது வெறுப்புகளையும் அவர்களுக்கு பிடிக்காத மதங்களையும் மக்கள் மனதில் திணிப்பதற்காகா அவர்கள் கையில் உள்ள ஆயுதம் தான் சினிமா. பத்திரிகைகள், டிவிக்கள், அவற்றின் விவாதங்கள் ஆகிய அனைத்தும் சினிமாக்காரர்களது ‘சாதனைகளைப் பற்றியே’ பேசுகின்றன! இதை மாற்ற யாரும் தயார் இல்லை! இங்கு இவர்களைத் தவிர வேறு முக்கியமானவர்கள் யாரும் இல்லை!

தமிழகத்தில், அரசே நடத்தும் மதுக்கடைகள் ரூபாய் 50,000 கோடி என்ற இலக்கை நோக்கிப் பயணம் செய்கின்றன! இதனால் ஏற்படும் சமுதாய சீரழிவைப் பற்றிப் பேசவோ, அவற்றைத் தடுக்கவோ யாரும் விவாதிக்கக்கூட தயாராக இல்லை!

கடந்த சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியைப் பிடித்து சுகத்தை அனுபவிப்பது மட்டுமே இங்கு அரசியல் கட்சிகளது முதல் குறிக்கோள்! அத்தனைக் கட்டமைப்புகளும் இதன் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டு விட்டன!

அண்ணாமலை சந்திக்கும் சவால்கள்:

இதனை யாரும் மாற்ற முடியாத ஒரு சூழ்நிலை ஆழமாக தமிழகத்தில் வேரூன்றி இருக்கிறது! இதை எதிர்ப்பவர்கள் அழிக்கப்படுவார்கள். என்பது இங்கு எழுதப்படாத சட்டம்! திராவிடக் கட்சிகளால் உருவாக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, பிராமணர் எதிர்ப்பு ஆகிய சித்தாந்தங்கள்தான் இங்கு நிலையானவை;

அவற்றை உருவாக்கியவர்கள் தான் இங்கு வணங்கப்படும் தெய்வங்கள்! இதை மறுத்துப் பேசுபவர்கள் வன்மையான கண்டனங்களையும் தாக்குதல்களையும் இங்கு சந்திக்க வேண்டும்! இதுதான் தமிழகத்தின் நீண்டகால ஜனநாயகம்; பேச்சுரிமை; எழுத்துரிமை!

இவை அனைத்தையும் தங்களது ‘முழு முயற்சியோடு’ பாதுகாக்கிறது தமிழக பத்திரிகைகள். இந்த சூழ்நிலையில், உயர்ந்த எண்ணங்களை தன் மனதில் கொண்டு, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் அரசியல் மாற்றங்கள் செய்ய கடினமாக உழைக்கிறார்,.K.அண்ணாமலைபாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் பயணத்தில் பெரும் முட்டுக்கட்டையாக இன்று செயல்படுபவர்கள் தமிழக பத்திரிகைகள்!

தங்களது ஜனநாயகக் கடமையை மறந்து, தங்களது சமுதாயக் கடமைகளை மறந்து, தாங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பதையும் மறந்து ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு எதிராக பத்திரிகைகளே செயல்படுவது தமிழகம் எந்த பாதையில் பயணிக்கிறது என்பதற்கு ஒரு அளவுகோல்!

தமிழகத்தில் அத்தனை சுயநல சக்திகளும் ஒன்று சேர்ந்து திரு.அண்ணாமலையை எதிர்க்கின்றன.
தமிழக மக்கள் தங்களது தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது! அண்ணாமலை தனி மனிதன் அல்ல, தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் தலைவர் என்று அவரை உணரச் செய்து அவருக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுக்க வேண்டியது தமிழக மக்களது கடமை!

கட்டுரை : S. இரத்தினசுவாமி.

Exit mobile version