சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 13.7 லட்சம் மதிப்பிலான 18600 அமெரிக்க டாலர் சுங்கத் துறையினரால் பறிமுதல்

இந்தியாவிலிருந்து வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஃபிளைட் ஐஎக்ஸ் 1643 விமானத்தில் பயணம் செய்யவிருந்த சென்னையைச் சேர்ந்த சையது அலி (26) என்பவரை புறப்பாடு முனையத்தில் விமான நிலைய சுங்கத் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

அவரைச் சோதனை செய்ததில், அவரது உள்ளாடையில் 3 பொட்டலங்கள் மறைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பொட்டலங்களைப் பிரித்து பார்க்கையில் 15600 அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவரது கைப்பையில் இருந்து கைப்பற்றப்பட்ட சிகரெட் பாக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3000 அமெரிக்க டாலர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்தம் ரூபாய் 13.7 லட்சம் மதிப்பிலான 100 அமெரிக்க டாலர் நோட்டுக்களாக 18600 அமெரிக்க டாலர்கள் சுங்கச் சட்டம் 1962ன் கீழ் அந்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.

Exit mobile version