சென்னிமலையை ஏசு மலையாக்குவோம்.. கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட பாதிரியார்..

கொங்கு மண்டலம் ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவில் மிகவும் பிரசித்திபெற்ற கோவில். பல சிறப்புகளை அடக்கிய கோவில்.3000 வருடம் பழமையான கோவில் என அப்பகுதிவாசிகள் கூறுகின்றார்கள். ஆண்டுதோறும் லட்சணக்கணக்கான மக்கள் முருகனை தரிசித்து வருகிறார்கள். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் சென்னிமலை முருகன் கோவில் உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் இருக்கும் சென்னிமலையை ஏசுமலை என பெயர் மாற்றம் செய்வோம் என கிறிஸ்துவ முன்னனி பகிரங்கமாக மேடை போட்டு அறிவித்துள்ளது.இதனால் அப்பகுதி முருக பத்தர்கள் மற்றும் ஹிந்து முன்னணியினர் சென்னிமலை ஆண்டவர் குழு, ஊர்மக்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள்.

மேலும் சென்னிமலையை ஏசுமலையாக மாற்றுவோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்துவ முன்னணி அமைப்பின் தலைவர் சரவணன் ஜோசப் செங்கல்பட்டில் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பல சர்ச்சையை கிளப்பிய கிறிஸ்துவ முன்னணியினர் இந்த நிலையில் சென்னிமலைக்கு வந்த மத்திய அமைச்சர் சாமி தரிசனம் செய்ததோடு பிரதமர் மோடி பெயருக்கு அர்ச்சனை செய்து விட்டு சென்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த குணசேகரன் சாமுவேல் என்ற பாதிரியார் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

பாதிரியார் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் சென்னிமலை என்று சொல்லி ஒரு காரியம் குறித்து அனைத்து சேனல்களிலும் பார்க்கிறேன். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை உண்டாக்கக் கூடியதாக இருக்கிறது. கிறிஸ்தவ நண்பர்கள் சென்னிமலைக்கு சென்று பிரார்த்தனை செய்தது மிகவும் வன்மைக்குரிய காரியம். அதை அவர்கள் செய்திருக்கவே கூடாது.

கிறிஸ்தவ நண்பர்கள் சென்னிமலைக்கு சென்று பிரார்த்தனை செய்தது மிகவும் தவறான காரியம். அதை வன்மையாக கண்டிக்கிறேன். மற்றவர் வழிபடும் ஸ்தலத்திற்கு சென்று தான் நீங்கள் இயேசுவை பிரார்த்தனை செய்ய வேண்டும் என வேதத்தில் சொல்லவில்லை. இது வேண்டுமென்றே செய்யப்பட்டதாய் கருதுகின்றேன். ஆகவே, அப்படிப்பட்டவர்கள் மீது கட்டாயம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர்களும் துணை போகின்றார்கள் என்று தான் அர்த்தம். இப்படிப்பட்ட ஒரு சிலர் செய்யும் காரியத்தினால் மொத்த கிறிஸ்தவ மக்களுக்கும் தவறான பெயர் உண்டாகிறது என்பதில் எந்த விதமுமான சந்தேகமும் கிடையாது. கிறிஸ்தவ முன்னணினு சொல்றாங்க… அந்த கிறிஸ்தவ முன்னணி என்பதே எங்களுடைய கிறிஸ்தவர்களுக்கே தெரியாத ஒரு புதிய ஏதோ ஒரு காரியமாக இருக்கிறது. எங்களுக்கே அது என்ன வென்று தெரியவில்லை. அது தான் உண்மை.

கிறிஸ்தவ முன்னணியில் உள்ளவர்களை கண்டிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம் ஒட்டுமொத்த கிறிஸ்தவ மக்களுக்கும் பாதிப்பு உண்டாகிறது. வீணான மதக்கலவரத்தை கிறிஸ்தவ முன்னணியினர் கொண்டு வருகின்றார்கள் என கூறினார்..

Exit mobile version