மீண்டும் பல் இளித்த சீனாவின் கம்யூனிசம்…

ஜனநாயகம் என்பது வரம். இதை புரிந்து கொள்ள, இதை எதிர்மறையாக சொன்னால்தான் தெரியும்.

சௌதி போன்ற மன்னராட்சி நாடுகளில், இப்படியான பேச்சு எழுத்து உரிமைகள், ஏட்டளவில் கூட இல்லை. நிறைய எழுத இருக்கிறது.. பின்னர் எழுதலாம்.

சீனாவில் எந்த உரிமையும், சாதாரண, மத்திய, பணக்கார ஆசாமிகளுக்கு, ஏன் எவருக்குமே கிடையாது. எல்லாம் மேலே உள்ளவன் பார்த்துக்கொள்வான் என்பதாக, எல்லாம் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோவுக்கு மட்டும்தான். உள்ளூர் வாசிகளுக்கே இந்த கதி.. இதில் வெளிநாட்டு ஆசாமி இறங்கினால், திரும்பி ப்ளைட் ஏறும் வரையில் நிழலாய் போலீஸ் தொடரும். எங்கு தங்கினாலும், போலீஸூக்கு தகவல் போய்க்கொண்டே இருக்கும். சாதாரணமாக தங்கி இருந்தாலே, இந்த கதி. ப்ளாக்கிங், வ்ளாக்கிங்க்லாம் பண்ணினால்.. கதகளிதான் சாரி தினம் களிதான்.

இப்போது சீனாவில் ஃபேஸ் ரெகக்னிஷன் சிஸ்டம், 20 கோடி கேமராக்களால், படம் பிடிக்கப்பட்டு, அந்த ஆசாமிகளின் ஸோஷியல் க்ரெடிட் சிஸ்டத்தில்.. கைவைத்து, 24 மணி நேரமும் மக்களை உளவு பார்க்கிறது சீன அரசாங்கம். இதைப்பற்றி நம் உள்ளூர் கம்மிகளுக்கு தெரியுமா என்பது கூட சந்தேகம்தான். சீனாவில் வீட்டுக்குள் இன்னும் அரசு கேமரா வைக்கவில்லை அவ்வளவுதான்.

கோரோனா பற்றி உண்மையைச்சொன்ன டாக்டர், கொரோனாவில் செத்ததாக செய்தி. இதைப்பற்றி சொன்ன, பத்திரிக்கை நிருபர்கள், சீனாவின் செல்லில். இது அலிபாபாவின் ஜாக் மா வாக இருந்தாலுமே கூட இப்படித்தான் பொருந்தும்.

ஒரு சுபயோக சுபதினத்தில் ஜாக் மாவின் அலிபாபா ஷேர், மற்றும் ஆன்ட் கம்பெனி விலைகள் தடாலடியாய் சரிந்தது. ஆன்ட் கம்பெனியின் அமெரிக்க ஐபிஓ என்ட்ரியை.. ஷீ ஜின்பென்னின் பெர்ஸனல் ஆர்டரால் நிறுத்தி வைத்து.. நான்தான் எஜமான்டா என்று ஜாக்மாவிற்கு நிலைநிறுத்தியிருக்கிறார். அடிப்படையாய் மக்கள் மனத்தில் ஒரு பயத்தை உருவாக்குவதுதான்.. ஜனநாயகமில்லாத கம்யூனிஸ்ட் ஆட்சியோ, இஸ்லாமிய மன்னராட்சியோ செய்யும் முதல் காரியம்.

அலிபாபாவின் ஜாக்மா என்ன சொன்னார்..? ஜாக்மா சொன்னது, வங்கிகள், ஈடுகள் இல்லாமல் கடன் தரவேண்டும்.. சீனாவின் பைனான்ஸ் ரெகுலேட்டர்ஸ் ரிஸ்க் எடுக்காமல் ரஸ்க் சாப்பிட சொல்கிறார்கள் எப்படி முடியும்..? இப்படியெல்லாம் தினம் இங்கு நாங்கள் பேஸ்புக்கில் எழுதுகிறோம் என்பவர்கள்.. மனசாட்சியை லேசாக அசைத்துப்பாருங்கள். இதை சொன்னதற்கே.. ஜாக்மாவின் அலிபாபா மீது ஆன்டி ட்ரஸ்ட்.. ஆன்ட் கம்பெனியின் அமெரிக்க ஐபிஓ அம்பேல். இப்போது ஜாக்மாவையே காணவில்லையாம்.

இந்தியாவில்.. ஆதார் எதிர்ப்பிலிருந்து.. தீவிரவாத வரவர ராவ் வரைக்கும்.. சிஏஏ வரை எதிர்ப்பது இப்படியான கம்மிகள்.. கேட்டால் பாஸிஸ ஆட்சி என்பார்கள்…

கட்டுரை எழுத்தாளர் பிரகாஷ் ராமசாமி…

Exit mobile version