இந்தியாவிற்கு S500 அடுத்த 5 ஆண்டுகளுக்கு விற்பனை செய்ய கூடாது சீனா அலப்பறை.ரஷ்யாவிடம் இருந்து S400 வான் பாதுகாப்பு சாதனங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இன்னும் சில வாரங்களில் அது இந்தியா வரவிருக்கிறது.இதற்கு அமெரிக்கா என்ன மாதிரியான தடை செய்யலாம் என மோட்டு வளையை பார்த்து கொண்டு இருக்கிறது ஜோபைடன் நிர்வாகம்.ஆனால் அவர்களால் தற்போது உள்ள உலக அரசியல் சூழலில் தடை விதிக்க முடியாது தடை விதிக்காமலும் இருக்க முடியாது.
இந்த ஒரு சூழ்நிலையில் ரஷ்யா தனது மேம்பட்ட தொழில்நுட்ப வடிவமைப்பான S500 வான் பாதுகாப்பு சாதனங்களை இந்த ஆண்டு தொடக்கத்தில் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்து இருக்கிறார்கள். தவிர இதனை உலக நாடுகளுக்கு விற்பனை செய்யவும் திட்டமிட்டு அதற்கான செயல்பாடுகளில் இறங்கியும் இருக்கிறார்கள். அவர்களின் முதன்மையான தேர்வு இந்தியா மற்றும் சீனா. இதற்கு காரணம் இன்றைய தேதியில் உலக அளவில் பொருளாதார வர்த்தக பலமும் அதன் எல்லைகளில் உஷ்ண நிலையில் உள்ள நாடுகள் இவை தான்.
ஆதலால் சீனா ரஷ்யாவிடம் S500 வாங்க ஒப்பந்தம் செய்து அதற்கான முழு தொகையையும் செலுத்துவதாகவும் இதற்கு நிபந்தனையாக சீனாவிடம் வழங்கிய தேதியில் இருந்து அடுத்த வரும் ஐந்து ஆண்டுகளுக்கு இதனை இந்தியாவிற்கு விற்பனை செய்யவோ…. அல்லது வேறு எந்தவிதமான விதத்தில் இதனையோ.அல்லது வேறு எந்த தொழில்நுட்ப பகிர்மான அடிப்படையிலும் கொடுக்க கூடாது என்று தெள்ளத்தெளிவாக ரஷ்யாவிடம் கேட்டிருக்கிறார்கள்.
அவர்களின் பயம் அவர்களுக்கு.
இத்தனைக்கும் S400 வான் பாதுகாப்பு சாதனங்களை சீனா வாங்கி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகுகிறது.இன்னமும் இந்த சாதனம் இந்தியாவின் கைகளுக்கு வரவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் சீனாவின் S500 தொடர்பான இந்த நிபந்தனைகளால் இந்தியாவிற்கு ஏதேனும் பாதிப்பா என்று கேட்டால் நம்மவர்கள் நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.இதனை புரிந்து கொள்ள இதன் செயல்பாடுகள் மற்றும் பயன்பாடுகளை நாம் அறிந்திருத்தல் அவசியம்.
S500 மாத்திரம் தான் ரஷ்ய தயாரிப்பு. இதற்கு முன்னதான S400 மற்றும் S300 ஆகியவை ரஷ்ய தயாரிப்பு அல்ல.அவை சோவியத் ஒன்றியத்தின் தயாரிப்பு. இப்படி சொல்வதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முற்பட்ட தொழில்நுட்பம் இவை. சோவியத் ஒன்றிய நாடுகள் பிரிந்த பின்னர் இந்த தொழில்நுட்பம் பல கைகளுக்கு போனதாக சொல்வர். இந்தியாவிடமும் S300 வான் பாதுகாப்பு சாதனங்கள் இயங்கு நிலையில் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது.
இதில் என்ன பிரமாதமாக சமாச்சாரம் இருக்கிறது என்று கேட்டால்…… அதன் மிகத் துல்லியமான தாக்குதல் திறன் என்கிறார்கள். வானில் அசையும் இலக்குகளை அடித்து வீழ்த்துவதில் இதற்கு நிகர் இந்த உலகில் இல்லை என்பதை ஆனானப்பட்ட அமெரிக்காவே ஒரு சமயம் ஒப்புக் கொண்டு இருக்கிறது.
நம் பலரும் நினைப்பது போல் அது ஒரேயொரு வாகனத்தில் வைத்து எடுத்து செல்வது போன்ற சமாச்சாரம் இல்லை. கிட்டத்தட்ட நான்கு முதல் ஆறு வாகனங்கள் வைத்து கையாள கூடிய ….. கையாளவேண்டிய விஷயம். இதில் உள்ள SAM சர்பேஸ் டு ஏர் மிஸைலில் பல ரகங்கள் பலவிதங்களில் இன்று பயன் பாட்டிற்கு வந்து விட்டது. தவிர இந்த ஒரு தொகுப்பு ஒரே சமயத்தில் நாற்பது இலக்குகளை குறி வைத்து அதில் 12 இலக்குகளை ஒரே நேரத்தில் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
S300 வானில் முன்னூறு கிலோமீட்டர் தொலைவு வரை தாக்குதல் நடத்தகூடியது என்றால்…. S400 நானூறு கிலோமீட்டர் தொலைவு வரை தாக்குதல் நடத்தகூடியது. தவிர 18-24 இலக்குகளை குறி வைத்து இலக்கு ஒன்றுக்கு இரண்டு ஏவுகணை விதம் அதுவாகவே தேர்ந்தெடுத்து தாக்குதல் நடத்தும் அளவுக்கு திறன் பெற்றது என்கிறார்கள். இதுவே S500 என்றால் ஐநூறு கிலோமீட்டர் தொலைவு வரை இதன் தாக்குதல் வீச்சு இருக்கும். தவிர வானில் குறைந்த வட்டப்பாதையில் சுற்றி வரும் கண்காணிப்பு செயற்கை கோள்களையும் தாக்கி அழிக்கும் வல்லமையை கொண்டதாக இது இருக்கும் என்கிறார்கள்.
இது தான் விஷயமே.
ஏன் நம்மவர்கள் சிரிக்கிறார்கள் என்றால்… குறுகிய தொலைவு முதல் நீண்ட தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணைகளில் உலக அளவில் நாம் தான் ராஜா. அவ்வளவு துல்லியமான தாக்குதல் நடத்தும் அதி தொழில்நுட்ப பண்புகளை கொண்ட ஏவுகணைகளை உருவாக்கி அவற்றை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்து இருக்கிறோம் நாம். கிட்டத்தட்ட நம் வசம் 21 ரகங்கள் இருப்பதாக தகவல்கள் உண்டு. தற்சமயம் வெளிப்படையாக 13 ரகங்கள் உள்ளன. இவைகளை கொண்டு குறைந்த உயரத்தில் பறக்கும் செயற்கை கோள்கள் மட்டுமன்றி விண்வெளி ஆய்வு மையத்தையுமே வேண்டும் என்றால் தட்டித்தூக்கும் திறன் கொண்டவர் நாம். இதனை நிரூபித்தும் இருக்கிறார்கள்.
ஆதலால் நமக்கு S400 வான் பாதுகாப்பு சாதனங்களே அதிகம் தான்.இவற்றை ஏன் வாங்குகிறோம் என்றால்….. அதுவே ஒரு பம்மாத்து வேலை தான் என்கிறார்கள் நம்மவர்கள். நம் தொழில்நுட்ப வீச்சு உலக அளவில் ஒரேயடியாக வெளிப் பார்வைக்கு வேண்டாம் என நினைக்கிறது நமது தேசம். ஏனெனில் நம் தேசத்தின் நீண்ட கால கொள்கையும் அதுவாகவே இருந்து வருகிறது. இதனை உடைக்க விரும்பவில்லை என்கிறார்கள். அதேசமயம் யாருக்கும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் அவர்கள். நம் அணுஆயுத கொள்கை உட்பட பலவும் தாக்குதல் ரகம் அல்ல…. அவற்றை தடுக்கும் ரகமாகவே இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
ஆனால் சீனாவின் தொழில்நுட்ப பண்புகள் அப்படியானதல்ல.பலவும் பலநாடுகளில் இருந்து திருடப்பட்டது…… அல்லது காப்பி அடிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.ரஷ்யா தற்சமயம் பயப்படுவதும் அதற்கு தான்.எங்கே அதி உச்ச செயல்திறன் மிக்க S500 வான் பாதுகாப்பு சாதனத்தின் மாதிரியை ரிவர்ஸ் இஞ்சினியரிங் முறையில் உற்பத்தி செய்துவிடுவார்களோ என பயப்படுகிறார்கள்.ஏற்கனவே இதே S300 சாதனத்தை அவ்விதமே உருமாற்றி S350 என குறளி வித்தை காட்டி கொண்டு இருக்கிறது சீனா.
இது போல சீனா மாத்திரம் அல்ல… துருக்கி ஈரான் ஆகிய நாடுகளும் இந்த முறையில் தங்களுடைய வான் பாதுகாப்பு சாதனங்களை உற்பத்தி செய்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இயங்குமா என கேள்வி கேட்டு கொண்டு இருக்கக்கூடாது சரியா.ரஷ்யா விடம் S500யை இந்தியா கேட்காமல் இருப்பதற்கும் வேறோர் காரணமும் சொல்கிறார்கள்.ரஷ்யா வழங்கவிருக்கும் S400 வான் பாதுகாப்பு சாதனங்களில் ஏதேனும் #கை வைத்து இருக்கிறார்களா என பார்க்க விரும்புகிறது என்கிறார்கள். ஏற்கனவே இதே போன்ற தகிடுதத்தமான சமாச்சாரங்களை ரஷ்யா பல தடவைகள் செய்து இருக்கிறது என்கிறார்கள்.
அது பிரத்தியேகமாக தயாரிக்கும் விமான ரகங்கள் ஆகட்டும்… ஏவுகணை அல்லது ராக்கெட் உந்துவிசை இஞ்சின்களாகட்டும் எதனையும் இந்தியாவிற்கு என விற்றதில்லை.. பகிர்ந்து கொண்டதும் இல்லை…. அதேசமயம் வெளியுலகுக்கு விற்பனை செய்த ஏது ஒன்றையும் சீனாவிற்கு மறைமுகமாக தாரை வார்த்து கொடுப்பதை அது நிறுத்திக் கொள்ளவும் இல்லை …இது தான் ரஷ்ய இந்திய கூட்டு தயாரிப்பில் உருவாகவிருந்த ஐந்தாம் தலைமுறை விமானங்களின் போதும் நடந்தது, அதன் பொருட்டே இந்தியா அந்த திட்டத்தில் இருந்து வெளியேறியது என்கிறார்கள். இவர்கள் குறிப்பிடும் விஷயம் su57 விமானமாகும். இன்று வரை அந்த விமான ரகம் பயன்பாட்டிற்கு வரவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா தனது ஆயுத தளவாட இறக்குமதியை குறைத்து கொண்டு வருகிறது. இதில் முதலில் அடிபடும் நாடு ரஷ்யா. அதுபோலவே கொஞ்சம் கொஞ்சமாக ஆயுத உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடாக இந்தியா உயர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது…. இதில் முதலில் அடிபடும் நாடு அமெரிக்கா.
ஆதலால் சர்வ ஜாக்கிரதையாக இந்தியா அடிமேல் அடிவைத்து உலக அளவில் முன்னேறி வருகிறது என்பதையும் நம்மால் கண்கூடாக பார்க்க முடியும்.
கட்டுரை வலதுசாரி சிந்தன்னையாளர் ஸ்ரீராம்.