மதன் ரவிச்சந்திரன் ஊடக நெறியாளர் இவரை தெரியாத ஊடகங்களும் இல்லை வலது இடதுசாரி பார்வையாளர்களும் இல்லை. நடுநிலையோடு பேசுவதினால் இவரை சங்கி என அழைக்க ஆரம்பித்தார்கள். பாண்டே ,வரிசையில் மதன் ரவிச்சந்திரனும் . பொதுவான மேடையில் திக திமுகவை எதிர்த்து கேள்வி கேட்டால் அவர் சங்கி என முத்திரை குத்துவது தமிழகத்தில் சகஜம்.
மதன் ரவிச்சந்திரன் வேலை செய்யும் ஊடகங்களில் இருந்து விரட்டப்படும் ஊடகவியலாளர். திமுக மற்றும் திராவிட சித்தாந்தங்களை முழுவீச்சில் எதிர்க்க கூடியவர் மதன். நியூஸ்7 தொலைக்கட்சியில், தி.க தலைவர் வீரமணியிடம் “ஓசி சோறு” குறித்து கேள்வி எழுப்பியவர். காவிரி தொலைக்காட்சியில் சுப வீரபாண்டியனை தனது கேள்விகளால் திணறடித்தவர். திருமாவளவன், பொன்முடி என அனைவரின் முகத் திரையை கிழித்த மதன் ரவிச்சந்திரன், ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் விரட்டி அடிக்கப்பட்டார்.
ஏனென்றால் அனைத்து தொலைக்காட்சிங்க்ளும் திடல் ஊடகங்களின் சொம்பு ஆகும். இதையும் வெளிப்படையாக தெரிவித்த முதல் ஆள் தான் இந்த மதன் ரவிச்சந்திரன். பின்பு பாஜக ஆத்தரவாளர் தேவேந்திர யாதவ் அவர்களின் தொலைக்காட்சியான வின் டிவிக்கு மாறினார். வின் டிவி நிர்வாகம் மற்ற தொலைக்காட்சிகளைப் போல் கட்டுப்பாடுகள் விதிக்காமல் முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதி வழங்கியது வின் டிவி நிர்வாகம்.
வின் டிவியில் தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடி அவர்களிடம் நடத்திய நேர்காணலில், ஸ்டாலின் மிசா கைது குறித்து மதன் கேள்வி எழுப்பியதற்கு பொன்முடியால் பதிலளிக்க முடியவில்லை. ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யவில்லை, மிசா காலத்தில் வேறு ஒரு காரணத்துக்காக கைது செய்யப்பட்டார் என்று கேட்க, அது பற்றி எனக்கு ஏதும் தெரியாது என பொன்முடி பதிலளிக்க, ஸ்டாலின் மிசா கைது குறித்த சர்ச்சை மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்தது.
இந்த நிலையில் வின் தொலைக்காட்சி பிரபலம் அடைந்தது. ஆனால் அங்கும் பிரச்சனை ஏற்பட்டது. வின் தொலைக்காட்சியில் புதிய தலைமுறையை சேந்தவர் மிக முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அவரால் மீண்டும் மதனுக்கு சோதனை அதன் காரணமாக அந்த தொலைக்காட்சியை விட்டு வெளியேறினார் மதன் ரவிச்சந்திரன். என்ற செய்திகள் வெளிவந்தது.
பின்பு அதிமுகவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் முதலீடு செய்து சேனல் விஷன் என்கிற யூடூப் சேனல் தொடங்கினார்கள். தொடங்கிய சிலகாலத்தில் அமோக வரவேற்பை பெற்றது சேனல் விஷன், இரண்டு மாதத்திற்கு முன்பு சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் மான் வேட்டை குறித்து சேனல் விஷனில் வீடியோ வெளியிட்டு பெரும் பரப்ரபை ஏற்படுத்தினார். இதன் பின் மதனுக்கு நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் மர்மமாக உள்ளது. அவருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு விலக்கப்பட்டது; தற்போது சேனல் விஷனில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இரண்டு மாதம் கழித்து தற்போது மதன் டைரி எனும் yotube சேனலை உருவாக்கியுள்ளார். மதன் இதன் தொடக்கமே ஒரு அதிரடியாக களம் கண்டுள்ளார். உதயநிதியை வைத்து தான் மதன் ரவிச்சந்திரன் மீதும் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். மான் வேட்டை குறித்து தகவல் கொடுத்தவர்களை திமுக மிரட்டியுள்ளது. அதை மதனிடம் தெரிவித்துள்ளார் அந்த நபர். இதன் காரணமாக ஒரு வீடியோவை வெளியிட்டு மீண்டும் வந்துட்டேன் சொல்லு என்ற ரீதியில் மதன் களம் இறங்கிவிட்டார். இதனால் உதயநிதியும் சற்று மனா உளைச்சலில் இருக்கிறாராம்!
https://www.youtube.com/channel/UC-BfQ_cXiXPMbXMIziwSTxA