இந்தியாவிலிருந்து சீனா மக்கள் வெளியேற வேண்டும் சீனா அறிவிப்பு! சீனாவை சிதறடிக்க காத்திருக்கும் இந்தியா!
சீனா தன்னுடைய மக்களை இந்தியாவில் இருந்து வெளியேறும் படி தூதரகம் மூலமாக அறிவுறுத்தி கொரானாவுக்கா இல்லை இந்தியாவிடம் போர் தொடுக்கவா என்பது போகப்போக தெரியும்.
கொரானா வைரஸ் தாக்கம் ஐரோப்பிய நாடுகளை சின்னாபின்னாமாக்கியுள்ளது இது சீனாவிற்கு மிகப்பெரிய அடியை கொடுத்துள்ளது. கொரோனா விவகாரம் அவ்வளவு சாதாரணமாக முடியாது என்றே தெரிகிறது. அமெரிக்கா தென் சீனக்கடலில் சீனாவை கார்னர் செய்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சீன-அமெரிக்க உறவு தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விளுக்குப் பதிலளிக்கையில் வாங்யீ அமெரிக்காவிடம் கெஞ்ச தொடங்கியுள்ளார்.
சீன-அமெரிக்க உறவு, பன்னாட்டுக் குவிமையமாகும். இவ்வாண்டு, இரு தரப்புறவில் கொவைட்-19 நோய் பரவலால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொவைட்-19 நோய், சீனா மற்றும் அமெரிக்காவின் பொதுவான எதிரியாகும் என பணிந்து பேச ஆரபித்திருக்கிறது சீனா . நிலைமை இவ்வாறு இருக்க சீனா இந்திய எல்லையில் மல்லுக்கு நிற்கிறது.உண்மையாகவே இந்தியா சீனா இடையே போருக்கான அனைத்து ஒத்திகைகளும் நடைபெற்று கொண்டு இருக்கிறது.
கொரானாவினால் சீனாவின் வர்த்தகம் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது அங்குள்ள பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வர தயாராகி கொண்டு வரும் நிலையில் அப்படியொருவாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்து விடக்கூடாது என்பதற்காக சீனா இந்தியாவை தாக்க முற்படலாம்.இந்தியாவும் தயாராக உள்ளது இந்தியாவின் ஹோம் மேட் பைட்டர் ஜெட் தேஜாஸ் இந்திய சீனா இடையே பஞ்சாயத்து ஓடிக்கொண்டு இருக்கும் லடாக் பகுதியில் பாய்ந்து பறந்து நிலைமையை கண்காணித்து கொண்டு இருக்கிறது. லடாக்கில் தேவைக்கு அதிகமான படைகளை குவிக்கிறது இந்தியா
முதலில் தாக்குவது இந்தியாவின் கொள்கை அல்ல என்பதற்காக, சீனாவின் முதல் தோட்டாவை எதிர்பார்த்து காத்திருக்கிறது . ‘லே’ விமான தளத்தில் படைகளை கொண்டு சேர்த்த விமனப்படையில் G17_Globemaster விமானம்..காலம் இறங்கியுள்ளது குறிப்பிட தக்கது
ஆனால் உலக நாடுகளில் 2 அல்லது 3 சிறிய நாடுகளை தவிர ஏனைய நாடுகள் இந்தியா பக்கமாக இருப்பதால் சீனா வழக்கம் போல படம் மட்டும் காட்டி விட்டு ஓடி ஒளிந்து கொள்ளும். ஒரு வேளை இந்தியா சீனா போர் வந்தால் சீனா 100 வருசத்துக்கு முன் இருந்த நிலைக்கு சீனா சென்று விடும்.அதில் இருந்து சீனா மீள பல வருடங்கள் ஆகும்
1900-01 ல் சீனாவில் மேற்கு நாட்டவர்களுக்கு எதிராக நடைபெற்ற பாக்சர் கலகத்தை அடக்க இங்கிலாந்து தலைமையி ல் பன்னாட்டு படைகள் சீனாவில் நுழை ந்து சின்னா பின்னாமாக்கி ஆளாளுக்கு கூறு போட்டு எடுத்துக் கொண்டார்கள்
இப்பொழுதும் அதே மாதிரிநிலையை சீனா மீண்டும் சந்திக்கும்.பாக்சர் கலகம் மூலமான உருவான போரினால் சீனாவில் மன்னர் ஆட்சிக்கு முடிவுக்கு வந்தது இனி யொரு போரை சீனா சந்திக்க நேர்ந்தால் சீனாவில் கம்யூனிச ஆட்சி முடிவுக்கு வரும்.ஆனால் இந்த முறை அந்த படைகளுக்கு இங்கிலாந்து இல்லாமல் அமெரிக்கா தலைமை தாங்கி வழி நடத்தி செல்லும். ஏற்கனவே சீனாவின் இந்த 2020 ம் ஆண்டான மெட்டல் எலி ஆண்டு டேஞ்சராக இருக்கும் என்று கூறி இருக்கிறார்கள். ஏற்கனவே சீனாவின் நிலைமை டேஞ்சராக இருக்கிறது அது படு டேஞ்சராக மாறி விடாமல் பார்த்து கொள்வது நல்லது.
வலது சாரி எழுத்தாளர்: விஜயகுமார்