சீன வைரஸ் கொரோனவிலிருந்து ஆகஸ்ட் 15 ல் சுதந்திரம் ? நம்பிக்கை தரும் இந்திய மருத்துவ கவுன்சில்

உலகை புரட்டி போட்டு வரும் கொரோனாவுக்கு அதிகாரப்பூர்வமாக எந்த நாடும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. உலக நாடுகள் அதன் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது . ரஷ்யா இஸ்ரேல் போன்ற நாடுகள் மருந்து கண்டுபிடிக்கப்பபட்டதாக அறிவித்திருந்தாலும், அவை பாரிசோதனை முறையிலேயே உள்ளன. கொரோனாவுக்கு இதுவரை உலகம் முழுவதும் 100 மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அஸ்ட்ராஸெனகா, பயோடெக் , ஜாண்சன் அண்டு ஜாண்சன் , மெர்க் , மாடெர்னா, சனோஃபி சீனாவின் கான்சைனா பயோலாஜி நிறுவனங்கள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
மேலும் இந்தியாவில் ஆயுர்வேதா சித்தா மூலம் கொரோனா நோயாளிகள் குணமடைந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கபசுப குடிநீர், ஆயுர்வேத மாத்திரை ஆர்செனிக் ஆல்பம் 30 போன்றவை அரசு அங்கீகரித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் இருந்து உலகம் முழுவதும் பரவிய இந்த கொரோனாவால் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை குணப்படுத்தவோ அல்லது வராமல் தடுக்கும் மருந்தையோ கண்டுபிடிக்கும் பணி சர்வதேச மருத்துவ நிபுணர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் தற்போது முன்னிலையில் இருப்பது இந்தியாவை சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனம். ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் கோவேக்சின் எனும் தடுப்பூசியை தயாரித்துள்ளது. வீரியம் குறைந்த வைரஸை உடலுக்குள் செலுத்தி நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதே இந்த தடுப்பூசியின் முக்கிய அம்சம்

ஆரம்ப நிலையில் இதனை விலங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்ததில் வெற்றி கிடைத்தது. இதனால் வரும் 7-ம் தேதி முதல் மனிதர்கள் மீது பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான தன்னார்வலர்களின் உடலில் செலுத்தி இந்த தடுப்பூசி பரிசோதிக்கப்படும்.. பின்னர் இதை பயன்படுத்துவது எந்த அளவிற்கு பாதுகாப்பானது? நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்ப்பார்த்த அளவிற்கு அதிகரிக்க செய்கிறதா? பக்க விளைவுகள் ஏதும் உருவாகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.. இதைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 100-க்கும் மேலானவர்கள் மீது இந்த தடுப்பூசி பரிசோதிக்கப்படும், இதன் முடிவுகளும் எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுத்தால் மூன்றாம் கட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டும் 1300 பேருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி பரிசோதிக்கப்படவுள்ளது.

திட்டமிட்டபடி இந்த சோதனைகள் அனைத்தையும் விரைந்து முடிக்குமாறு பாரத் பயோ டெக் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்… சோதனையின்போது கொரோனா தொற்றை தடுப்பதில் இந்த தடுப்பூசி எந்த அளவிற்கு வெற்றி பெற்றது எனும் முடிவுகளை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது…

தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பந்தயத்தில் பல நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், பாரத் பயோ டெக் நிறுவனத்தின் இந்த சோதனை முடிவுகள் வெற்றி பெற்றால் உலகமே பார்த்து மிரளும் கொரோனாவை ஒழித்த பெருமை இந்தியாவின் வசமாகும்.

Exit mobile version