பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள்” பாதயாத்திரை மூலம் மக்களை சந்தித்து வருகிறார். இந்த பாதயாத்திரை தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கிய திருப்பமாக அமையும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். மேலும் அண்ணாமலை யாத்திரைக்கு இணையம் மூலம் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் சாதி மத பாகுபாடின்றி மக்கள் பாதயாத்திரையை வரவேற்று வருகிறார்கள். இந்த வரவேற்பு தி.மு.கவை கதிகலங்க செய்துள்ளது. அண்ணாமலை அவர்களின் இந்த பாதயாத்திரை ஒவ்வொரு நாளும் கிராமப் பகுதிகளில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், நகர்ப்புறங்களில் 4 தொகுதிகளையும் கடக்கும் வகையிலும் நடந்து வருகிறது. முதல்கட்டமாக 200 நாட்களுக்கு யாத்திரையை நடத்தப்படுகிறது.
ராமேஸ்வரத்தில் உள்துறை அமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட ‘என் மண்,என் மக்கள்’ யாத்திரை ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை , புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் சென்றது. அதன்பின்னர் அந்த யாத்திரை மீண்டும் சிவகங்கை மாவட்டம் வழியாக மதுரைக்கு வந்தது. மதுரையை தொடர்ந்து விருதுநகரில் தற்போது யாத்திரை சென்று கொண்டிருக்கிறது.
ஆகஸ்ட் 2ம் தேதி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் யாத்திரை நடந்த போது, காரைக்குடி செக்காலை சாலை பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய இளைஞர் ஒருவர் “குர்-ஆன்” பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார் பின் குரானை பயபக்தியுடன் வாங்கி கண்களில் ஒத்தி கொண்டார் அண்ணாமலை.
விருதுநகரில் கிறிஸ்தவர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பைபிள் பரிசளித்தனர். உடனே அண்ணாமலை பைபிளை வாங்கி கண்ணில் வைத்து ஒத்திக்கொண்டார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. அண்ணாமலையின் இந்த இரு செயல்களும் மற்ற மதத்தினரை நெகிழ வைத்துள்ளது!