மகாராஷ்டிரவில் ஆட்சி மாற்றம் உறுதி! பிரதமரை சந்தித்த பின் அரசியல் பரபரப்பு!

காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் சிவசேனா கூட்டணியில் மகாராஷ்டிர மாநிலத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது . இந்நிலையில் உதவி தாக்கரே நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துள்ளார். அதற்கடுத்து பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் நீண்ட நேரம் பேசினார்.

உத்தவ் தாக்கரே. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்தும் பிரதமருடன் விவாதித்ததாகவும. குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து யாரும் அஞ்ச வேண்டியதில்லை என்றும், தேசிய மக்கள்தொகை பதிவேடு யாரையும் நாடற்றவர்களாக ஆக்கிவிடாது என்றும் உத்தவ் தாக்கரே கூறினார்.

குடியுரிமை சட்டம் என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டிருப்பதாகவும், என்ஆர்சி-யை மகாராஷ்டிராவில் செயல்படுத்தப்படும் எனவும் உத்தவ் தாக்கரே கூறினார்.காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து வரும் குடியுரிமை சட்டம் என்.பி.ஆர், என்.ஆர்.சி சட்டங்களுக்கு உத்தவ் தாக்கரே அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதனால் மாகாராஷ்டிர ஆளுங்கூட்டணியில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் நிலை வந்துள்ளது. இதற்கு முன் குடியுரிமை சட்டம் குறித்து இரட்டை நிலை எடுத்த சிவசேனா மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. இதனால் அச்சம் அடைந்த சிவசேனா இது குறித்து முடிவெடுக்க முடியாமல் திணறியது. காங்கிரசை பகைத்தால் ஆட்சி கவிழும் ஆதரித்தால் மக்களின் நம்பிக்கை இழக்கும் என்ற சிக்கலில் மாட்டியுள்ள சிவசேனா முதலில் மகாராஷ்டிரா அமைச்சரை வைத்து குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என கூற வைத்தார்கள். தற்போது பிரதமரை சந்தித்து விட்டு வெளிய வந்த தாக்கரே என்.பி.ஆர், என்.ஆர்.சி போன்ற சட்டங்கள் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என கூறியுள்ளது மகாராஷ்டிரா அரசியல் களத்தை பரபரப்பாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா மீண்டும் பா.ஜ.க வுடன் கூட்டணி ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை சிவசேனா தொண்டர்களிடையே வந்துள்ளது. ஆனால் பாஜக விரும்புவது தேர்தலில் சந்தித்து தனியாக ஆட்சி பிடிக்க வேண்டும் என பட்னவிஸ் காய் நகர்த்தி வருகிறார். எதோ ஒன்று மகாராஷ்டிராவில் தாமரை மலர்வது உறுதி ஆகி உள்ளது.

Exit mobile version