பெட்ரோல் டீசல் விலையை ஓட்டுக்காக அன்று விலையை செயற்கையாக இறக்கிய காங்கிரஸ் -திமுக கூட்டணி இன்றைக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறது. அன்று இவர்கள் செய்த தவறுக்கு இன்றைய பா.ஜ.க அரசும் மக்களும் சுமையை சுமந்துகொண்டுள்ளனர்.
எண்ணெய் கடன் பத்திரங்களுக்காக இந்த ஆண்டு, மத்திய அரசு, 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும். அன்று, காங்கிரஸ்தலைமையிலான கூட்டணி அரசு செய்த தவறுக்கு, இன்று பா.ஜ.க ஆட்சி பரிகாரம் தேட வேண்டியிருக்கிறது என்கின்றனர், எண்ணெய் துறை வல்லுனர்கள். ஒரு பக்கம், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது என, உரத்த குரல் எழுப்பும் காங்கிரஸ், தன் ஆட்சி காலத்தில் செய்த பிழையை திரும்பி பார்க்க மறுக்கிறது.
கடந்த, 2005 — 06 முதல், 2008 — 09 நிதியாண்டுகள் இடையே, காங்கிரஸ் அரசு, 1.4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு எண்ணெய் கடன் பத்திரங்களை வெளியிட்டது.
அதாவது, அப்போது செயற்கையாக பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பியது காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு. வெளிநாட்டில் இருந்து கூடுதல் விலைக்கு கச்சா எண்ணெய் வாங்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட விலையில், இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது.இதனால், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், கடும் நிதி நெருக்கடியில் தள்ளாடின. அவற்றால், உற்பத்தி செலவை கூட திரும்ப பெற முடியவில்லை. அந்த சமயத்தில் தான், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் கடன்களை சீர்செய்ய, எண்ணெய் கடன் பத்திரங்களை வெளியிட்டது, அப்போதைய காங்கிரஸ் அரசு.அதாவது, அவை அடைந்த நஷ்டத்துக்கு ஈடாக பணமாக கொடுக்காமல், கடன் பத்திரங்களை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டது.
அதுதான் இப்போது, நம் தலை மீது சுமையாக வந்து விடிகிறது. மார்ச், 2015ல், 3,500 கோடி ரூபாய் அளவுக்கு எண்ணெய் பத்திரங்கள் முதிர்வடைந்தன. அதன் பின், இந்த ஆண்டு, 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பத்திரங்கள் முதிர்வடைய உள்ளன. இவற்றுக்கு வட்டி இன்னொரு, 10 ஆயிரம் கோடி ரூபாய். ஆக மொத்தம் 20 ஆயிரம் கோடி ரூபாய் தேவை.
கடந்த பட்ஜெட்டில், இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பத்திரங்களில், ‘மியூச்சுவல் பண்டு’ நிறுவனங்களும், தனியார் முதலீட்டாளர்களும் முதலீடு செய்துள்ளனர். அவர்களுக்கு உரிய தேதியில் பணத்தை திருப்பித்தர வேண்டும். இல்லையெனில், இந்திய அரசுக்கே அவமானம். அதன் தரமதிப்பீடு சர்வதேச சந்தையில் சிதைந்து போய்விடும். அதனால், முதிர்வு தொகை இந்த ஆண்டு அக்டோபரிலும், நவம்பரிலும் திரும்ப தரப்படவிருக்கிறது.உண்மைக்கு புறம்பானதுஇது மட்டுமல்ல. 2026 மார்ச் வரை, இன்னும், 10 கடன் பத்திரங்கள் முதிர்வு அடையவுள்ளன.
1.2 லட்சம் கோடி ரூபாய் வரை முதிர்வு தொகையும், அதே அளவுக்கு வட்டியும் சேர்ந்து, திரும்ப வழங்கப்பட வேண்டும். அன்றைய ஆட்சியாளர்கள், நாங்கள் மக்கள் மீது சுமையை ஏற்றவில்லை என்று சொன்னால், அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. ஏனெனில், அவர்கள்அடுத்த தலைமுறையினர் மீது சுமையை ஏற்றி விட்டு சென்றுள்ளனர்.அன்று பற்ற வைத்தது இன்று எரிகிறது.
நன்றி : தினமலர்