குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் காணவில்லை ! கரையும் காங்கிரஸ்!

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்வது உறுதி இந்த நிலையில் ,குஜராத் காங்கிரஸின் இரண்டு எம்.எல்.ஏக்கள் சனிக்கிழமை (மார்ச் 14) முதல் மயமாகி உள்ளது தெரியவந்துள்ளது இருவரும் காங்கிரஸ் கட்சியின் தொடர்பற்ற நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வரும் மார்ச் 26-ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலுக்கு முன் இந்தகாங்கிரஸ் கட்சியின் குஜராத்தை சேர்ந்த இரு எம்.எல்.ஏக்களும் கட்சியில் இருந்து விலக வாய்ப்புள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் தற்போது இந்த இரண்டு எம்.எல்.ஏ-க்களும் தற்போது மாயமாகியுள்ளனர்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயமான குஜராத்தின் இரண்டு எம்.எல்.ஏக்கள் லிமி தொகுதியைச் சேர்ந்த சோமா படேல் மற்றும் தாரி தொகுதியைச் சேர்ந்த ஜி வி ககாடியா. இந்த இரண்டு எம்.எல்.ஏக்களும் சனிக்கிழமை மாலை முதல் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அவர்களது மொபைல் அனைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், மாநிலங்களவை தேர்தலின் போது ஐந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சிக்கு எதிராக வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாகவும், கட்சி தனது எம்.எல்.ஏக்கள் அனைவரையும் ஜெய்ப்பூருக்கு மாற்றியதற்கு இதுவே காரணம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிடத்தக்க வகையில், 73 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 15 பேர் ஏற்கனவே ஜெய்ப்பூரை அடைந்துள்ளனர், மேலும் சில எம்.எல்.ஏக்கள் ஞாயிற்றுக்கிழமை ஜெய்ப்பூருக்கு அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Exit mobile version