செத்து போன காங்கிரஸ் கட்சிக்கு உயிர் கொடுக்க பிரியங்கா காந்தி உ.பி யில் அரசியல் நாடகம் !-வானதி சீனிவாசன்!

oredesam Vanathi Srinivasan

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தொகுதி மக்கள் அளித்த மனுக்கள் தொடர்பான நடவடிக்கைகள் குறுத்தும் புதிய கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் புலியகுளம் பகுதியில் உள்ள ரேசன் கடை பிரச்சினை, முதியோர் உதவி தொகை கிடைக்க பெறாதவர்களுக்கு உடனடியாக கிடைக்க பெற நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

பாஜக ஆட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சம்பளம் உயர்த்தபட்டதாகவும் இத்திட்டத்தின் கீழ் சம்பள பணம் நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் கிடைக்க பெறும்படி செய்துள்ளதாகவும் இத்திட்டத்தை விவசாய மக்களோடு இணைந்து செயல்பட வேண்டும் என்பதும் இத்திட்டம் முழுமையாக பயன் இல்லை என கூறிவிட முடியாது எனவும் இதனை மேலும் மேம்படுத்த மத்திய அரசு ஆராயும் என்று கூறினார்.

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் எட்டு பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு அம்மாநிலத்தின் முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் எனவும் பாரபட்சமற்ற நடவடிக்கைகள் இருக்கும் என தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி உ.பியில் தேர்தல் வருகின்ற காரணமாக செத்து போன காங்கிரஸ் கட்சிக்கு உயிர் கொடுக்க முயற்சி செய்வதாகவும் உயிரற்ற உடலை வைத்து அரசியல் செய்வது வேதனையான விஷயம் என்றார்.

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அனுமதிக்கபடாதது தொடர்பான கேள்விக்கு 144 தடை உத்தரவு பிறபிக்கபட்டுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய நிலை அம்மாநில அரசிற்கு உள்ளது என்றவர் கலவரம் ஏற்படும் சூழலில் அங்கு செல்கிறார் என்றால் அங்கு சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அம்மாநில அரசுக்கு உள்ளதாலும் சூழலின் தன்மையை கருதியே அவர் அனுமதிக்கபடவில்லை என்றார்.

இதனை அடுத்து கோவை மாநகராட்சி ஆணையரிடமும் தெற்கு தொகுதி குறித்த மனுக்களை அளித்தார்.

Exit mobile version