பஞ்சாப்பில் உடையும் காங்கிரஸ்! சோனியாவிற்கு எச்சரிக்கை விடுத்த பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்

பஞ்சாபில் காங்கிரஸ் கதை முடிவுக்கு வர இருக்கிறது. பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கின் எதிர்ப்பை மீறி சித்துவுக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை அளிக்க இருக்கிறது சோனியா குடும்பம். இதனால் கடுப்பாகி இருக்கும் அம்ரீந்தர்சிங் சோனியாவுக்கு நேரடியாகவே எச்சரிக்கும் விதத்தில் பஞ்சாப் அரசியலிலும்ஆட்சியிலும் தலையிடுவது நல்லதல்ல இதனால் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்து இருக்கிறார்.

அனேகமாக அம்ரீந்தர் சிங் காங்கிரசில் இருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பிக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது இதனால் 2022 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மரண அடி உறுதி.கடந்த 2017 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ராகுலை பிரச்சாரத்திற்கே வர வேண்டாம் என்று கூறிய கேப்டன் அம்ரீந்தர் சிங் தேர்தல் பிரச்சாரத்தில் வால் போஸ்டரில் கூட சோனியா ராகுலின் படங்களை கூட போடாமல் பிரச்சாரம் செய்து காங்கி ரஸை வெற்றி பெற வைத்து ஆட்சியில் அமர்த்தினார்.இதனால் தான் அம்ரீந்தர் சிங்கிற்கு போ ட்டியாக சோனியா குடும்பத்தினர் சித்து வை வளர்த்து வந்தார்கள்.இப்பொழுது சித்துவை பஞ்சாப் மாநில காங்கிரசின் தலைவராக சோனியா குடும்பம் கொண்டு வர நினைக்கிறது.

பதிலுக்கு கேப்டன் காங்கிரசை உடைத்துக்கொண்டு தனிக்கட்சி ஆரம்பிக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு வேளை கேப்டன் தனிக்கட்சி ஆரம்பித்து வருகி ன்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டால் அம்ரீந்தர் சிங் சிரோன்மணி அகாலி தளம் இடையே தான் தேர்தலில் போட்டி இருக்கும். காங்கிரஸ் 4 வது இடத்திற்கு போய்விடும் வாய்ப்புகள் இருக்கிறது இதனால் தேர்த லுக்கு பிறகு பஞ்சாபில் பிஜேபியின் ஆதிக்கம் கொண்ட ஆட்சி அமைய முடியும்.

பிரசாந்த் கிஷோரை வைத்து காங்கிரசை கரையேற்றி விடலாம் என்று சோனியா குடும்பம் கனவில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி என்று ஒன்று இருந்தால் தானே கரையேற முடியும்.பஞ்சாபில் கேப்டன் அம்ரீந்தர் சிங் ராஜஸ்தானில் சச்சின் பைலட் ஹரியானாவில் முன்னாள் முதல்வர் பூபேந்தர் ஹூடா சட்டிஸ்கரில் இப்போதைய சுகாதார அமைச்சர் சிங்டியோ எப்பொழுது வேண்டு மானாலும் காங்கிரசில் இருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பிக்கலாம்.

ஜார்கண்டில் கூட காங்கிரசில் பஞ்சாய த்து ஆரம்பமாகி இருக்கிறது.ராகுல் காங்கிரசில் உள்ள பாஜக ஆதரவாளர்கள் உதைத்து வேளியேற்றப்படுவார்கள் என்று நேற்று திருவாய் மலர்ந்தார்.இன்று பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் சோனியா குடும்பத்தை அமைதியாக இருங்கள். இல்லையென்றால் அவ்வளவு தான் என்று வெளிப்படையாகவே எச்சரித்து இருக்கிறார். விவசாயிகள் போராட்டம் என்கிற பெயரில் ஜாட் சீக்கியர்களை தூண்டி பஞ்சாபில் பிஜேபியை காலி செய்ய நினைத்த காங்கிரசிற்கு பதிலடியாக அதே சீக்கிய தலைவர்களை வைத்து சமாதி கட்டுகிறது பா.ஜ.க கட்டுரை :

வலது சாரி எழுத்தாளர் : விஜயகுமார் அருணகிரி
Exit mobile version