மயிலாடுதுறையில் மத வியாபாரிகளின் அத்துமீறல். பேருந்துகளில் மதப்பிரச்சாரம். மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிறிஸ்தவ மத வியாபாரிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திமுக ஆட்சியமைத்த பிறகு
மதம் மாற்ற ஆள் பிடிக்கும் கும்பலின் ஆக்டோபஸ் கரங்களில் சிக்காமல் தப்பிக்க இந்துக்கள் அல்லல்பட வேண்டிய நிலை உருவாகிவிட்டதை எவரும் மறுக்க முடியாது.
அங்க தொட்டு, இங்க தொட்டு கடைசியில தலையிலயே கை வைத்த கதையாக மதம் மாற கட்டாயப்படுத்தும் கொடுமை மயிலாடுதுறையில் நடந்துள்ளது.
நேற்று 29.08.2021 ஞாயிறு மாலை சுமார் 05:30 மணியளவில் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருவாரூர் செல்லும் அரசு பேருந்து ஒன்று புறப்படுகிறது.
அப்பேருந்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலர் பயணம் செய்கின்றனர்.பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில்முன் வரிசை இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண் திடீரென எழுந்து பயணிகளிடம் ஒரு துண்டு பிரசுரத்தை கொடுத்துள்ளார்.
அந்த பிரசுரத்தில் கிறிஸ்தவ மதம் மற்றும் இயேசு நாதர் பற்றிய செய்திகள் இருந்துள்ளன. மேலும் பயணம் செய்த ஒரு இந்து குடும்பத்தினரிடம் “இயேசுவின் ரத்தம் ஜெயம்” என்று சத்தமாக பல முறை கூறி அவர்களையும் திரும்ப சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதனை பேருந்தில் பயணம் செய்த ஒரு சகோதரர் எனக்கு போனில் தொடர்பு கொண்டு சொன்னார்.பேருந்தில் இருந்த அனைவரையுமே அந்த கிறிஸ்தவ மதவியாபார பெண்மணியின் செயல் கோபப்படுத்தியிருக்கிறது.
ஆனால் “பூனைக்கு யார் மணி கட்டுவது ?” என்ற கதையாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு அமர்ந்திருந்துள்ளனர்.
யாராவது அந்த பெண்ணை தட்டிக்கேட்டிருந்து அந்த பெண்ணும் ஏதாவது பேசியிருந்தால் அங்கு விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றிருக்க கூடிய வாய்ப்புகள் அதிகமாகும். கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யும் வியாபாரிகளை கட்டுப்படுத்திட மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன்.,
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















