கொரோனவால் முதல் உயிரிழப்பு தமிழகத்தில்! இறந்தவரின் வீடிருக்கும் பகுதி சீல் !

இந்தியா மட்டுமல்ல உலகத்தை தொடர்ந்து அச்சுறுத்தி பல உயிர்களை கிட்டத்தட்ட 18,000 உயிர்களை கொன்று வருகிறது . இந்தியாவும் கொரோனா வைரஸின் பிடியில் வர கூடாது என்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 536 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 69 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்திலும் 18 நபர்களுக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஈராக் சென்று வந்து கொரோனா வைரஸ் , நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த 54 வயது நிரம்பிய நபர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்றுவந்த அந்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் முதல் நபர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இதன் மூலம் இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version