கொரோனா கட்டுப்பாடு இந்திய அரசு உலக நாடுகளை போல…

போன் மூலம் சில கொரோனா பாதுகாப்பு , பின் தொடர்வு, தடுப்பு நடவடிக்கைகளை செய்ய திட்டமிட்டுள்ளது.

இதை சீனா முதலில் செய்தது…

ஒவ்வொருவர் போனுக்க்கும் ஒரு செயலியினை கொடுத்தது அதன் மூலம் அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்தது,

கூட்டமாய் கூடினாலோ இல்லை தடைசெய்யபட்ட இடங்களுக்கு சென்றாலோ அது காட்டி கொடுக்கும்.

இன்னும் பொது போக்குவரத்து இன்னும் பல இடங்களில் அவர்கள் செல்லும் பொழுது கண்காணிக்க முடியும்…

மகா முக்கியமான விஷயம் காவல்துறை ஆங்காங்கே போனை கையில் வைத்திருக்கின்றார்களா என சோதனை செய்யும்.

தென் கொரியா ஒரு படி மேலே போய் கையில் எலக்டார்னிக் பட்டையினை கட்டியது.

சீனா, இந்தியா போன்ற நாடுகள் மிகபெரிய மக்கள் தொகை கொண்டவை என்பதால் போன் ஒரு வழி, எல்லா மக்களுக்கும் போன் இல்லை என்றாலும் , அலுவலகவாசி
களையாவது ஓரளவு கண்காணிக்கலாம்.

இதனால் “ஆரோக்யா செயலி” என ஒன்றை எல்லா அலுவலகத்தாரும் தங்கள் போனில் நிறுவும் படி கம்பெனிகளுக்கு ஆலோசனை கொடுத்திருக்கின்றது மத்திய அரசு.

இது உலக நாடுகள் எல்லா
இடத்திலும் இருக்கும் நடைமுறை.

இதற்குள் ராகுல் காந்தி குதிக்க ஆரம்பித்துவிட்டார், “அய்யயோ இது போன் மூலம் மக்கள் தகவலை திரட்டி அவர்கள் ரகசியத்தினை அறிந்து பயமுறுத்தும் முயற்சி” என கடும் அழிச்சாட்டியம்.

பொதுவாக இங்கு போன்கள் ஏதும் ரகசியமல்ல, அரசு கண்காணிக்க நினைத்தால் ஓசையின்றி எல்லோர் போனையும் கண்காணிக்க முடியும்.

இது நடந்துகொண்டிருப்பது…

இதில் இப்பொழுது ராகுல் குதிக்கும் அவசியம் தெரியவில்லை, ஆக அன்னார் போனில் ஏதோ ரகசியம் இருக்கின்றது அல்லவா?

“என் அப்பன் குதிருக்குள் இல்லை” என்பது இதுதான், வரவர ராகுலின் அட்டகாச காமெடியும், குழப்பமான உளறலும் கூடிகொண்டே செல்கின்றது.

திமுக தலைவருக்கு இன்னும் விஷயம் தெரியாது, தெரிந்தால் “ஆரோக்யா செயலி”யினை எதிர்த்து போன் உடைப்பு போராட்டம் அறிவித்தாலும் அறிவிப்பார்,

உபிக்களும் உற்சாகமாக
போன்களை உடைப்பர்.!?

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் ஸ்டான்லி ராஜன்.

Exit mobile version