டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! ஒலிம்பிக் போட்டிகள் தொடர்ந்து நடக்குமா?

ஒலிம்பிக் நடைபெறும் டோக்கியோவில் நேற்றைய தினம் மட்டும் 3,177 பேருக்கு தொற்று உறுதி! அதிர்ச்சியில் ஒலிம்பிக் வீரர்கள்..!!

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று ஒரே நாளில் 3,177 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்து ஆண்டு நடைபெறவேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா தொற்று காரணமா இந்த ஆண்டு நடைபெறுகிது. கொரோனா இரண்டாம் அலை சற்று ஓய்ந்துள்ள நிலையில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் தொடங்கியது. பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் ஒரே நாளில் ஜப்பான் டோக்கியோவில் மட்டும் 3,177 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் அச்சமடைந்துள்ளனர். அங்கு பெருந்தொற்று தொடங்கிய பிறகு ஒரே நாளில் கொரோனா எண்ணிக்கை 3,000த்தை தொட்டிருப்பது இப்போதுதான்.

புதனன்று 3,000 கொரோனா பாதிப்புகள் புதிதாக ஏற்பட்டதால் டோக்கியோவில் மருத்துவமனைகளில் நெருக்கடி அதிகரித்துள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பங்கு கொள்பவர்கள் பயிற்சியர்கள் அதிகாரிகள் உட்பட 169 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த ஒலிம்பிக் போட்டிகளே அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்ட நிலையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு 2வது நாளாக அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் அங்கு ஒலிம்பிக் போட்டிகள் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்து அச்சம்தான் அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 2,848 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மேலும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும் என்று நிபுணர்கள் எச்சரிக்கவே செய்கின்றனர். இந்நிலையில், இன்று ஒரே நாளில் 3,177 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version