மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையாக இருந்த தீவிரவாதி தாவூத்திற்கு கொரோனா?

இந்தியாவில் 1993- ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணகர்த்தாவாக இருந்தவன் தாவூத் இப்ராஹிம் இவன் தற்போது பாகிஸ்தான் அடைக்கலத்தில் உள்ளான். இவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும்,பாகிஸ்தான் கராச்சி ராணுவ மருத்துவமனையில் அவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தாவூத் இப்ராமின் மனைவி சூபினா ஷெரீனுக்கும் கொரோனா தொற்று தாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து, கராச்சியில் அவரின் வீட்டு பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ இயக்கத்தின் முக்கிய அதிகாரி தெரிவித்துள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.

மும்பை டோங்கிரி பகுதியை சேர்ந்த தாவூத் இப்ராஹிம் மீது இந்தியாவில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர், பாகிஸ்தானில்தான் வசித்து வருவதாக சொல்லப்பட்டாலும், அந்த நாட்டு அரசு அதை மறுத்து வருகிறது.கடந்த 2003- ம் ஆண்டு தாவூத் இப்ராஹிமை சர்வதேச தீவிரவாதியாக இந்தியாவும் அமெரிக்காவுக்கு அறிவித்தன.

Exit mobile version