கண்டம் விட்டு கண்டம் தாக்கும் வண்ண ம் 5500-5800 கிலோ மீட்டர் தொலைவி ற்கு அணு ஆயுதங்களை ஏந்திக் கொண் டு இலக்குகளை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்ட அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு இருக்கிறது இந்த சோதனை ஒரிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில்
இந்த பரிசோதனயை டி.ஆர்.டி.ஓ நடத்தி இருக்கிறது இந்தியா.
மோடி அரசு பதவி ஏற்றதிலிருந்து இந்தியா தனது பாதுகாப்பு பலத்தை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள எதிரிகளை தாக்கும் வகையில் பல ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
மேலேயும் தற்போது சீனா லடாக் எல்லையில் அத்து மீறி வருகிறது.இந்த நிலையில்தான் சீனாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்தியா அக்னி-5 ஏவுகணையை சோதனை செய்துள்ளது. இந்த சோதனை ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியா இப்போது மேற்கொண்டுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ரக ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவு ஏவு தளத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. அப்போது குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.நிலப்பரப்பில் இருந்து மட்டுமின்றி கடலில் கப்பலில் இருந்தும் இந்த அக்னி 5 ராக்கெட்டை ஏவ முடியும்.இந்தியாவின் அணு ஆயுத ஏவுகணைகளில் அக்னி 5தான் இப்போது அதிக தூரம் சென்று தாக்குதல் நடத்த கூடிய ஏவுகணை ஆகும்.
தற்போது இருக்கும் அக்னி 5 ஏவுகணை மூலம் சீனாவின் எந்த எல்லை பகுதியையும், எந்த நகரத்தையும் தாக்க முடியும். இதன் 8ம் கட்ட சோதனை இப்போது செய்யப்பட்டுள்ளதால் சீனா கொஞ்சம் கலக்கத்தில் உள்ளது.