கொரோனா குறித்து மத்திய சுகாதாரத்துறை செய்திகள் சில…

மத்திய சுகாதாரத்துறை செய்திகள் சில…

1, கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் இரு ஊசிகளுக்கு இடையேயான இடைவெளி இது வரை 6 – 8 வாரமாக இருந்தது. அதை 12 – 16 வாரமாக நீட்டித்திருக்கிறது அமைச்சகம். (இதனால் அதிகம் பேருக்கு முதல் டோஸ் கிடைக்கும்).

2, இந்த ஆண்டு ஆகஸ்ட் – டிசம்பருக்குள் 216 கோடி தடுப்பூசி மருந்து கிடைக்கும் என்கிறது சுகாதார துறை. இந்த 216 கோடியும் இந்தியாவில் தயாரானவை. இவை தவிர வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவை தனி (எக்ஸ்டிரா).

கோவிஷீல்டு – 75 கோடி.
கோவாக்ஸின் – 55 கோடி.
பயோ இ – 30 கோடி.
சைடஸ் கடிலா – 5 கோடி.
பாரத்பயோடெக் நேசல் – 10 கோடி.
ஜென்னோவா – 6 கோடி.
ஸ்புட்னிக் – 15.6 கோடி.
நோவாவாக்ஸ் – 20 கோடி. (இதன் மூலப்பொருளை பைடன் அரசு நிறுத்தி வைத்துள்ளது)

3, உலகெங்கும் நடைமுறையில் இருக்கும் வழக்கப்படி தடுப்பு மருந்து முன்னுரிமை (prioritization) வழங்கப்பட்டுள்ளது இந்தியாவில்.

ஜனவரி 16 முதல்: முதலில் சுகாதார ஊழியர்கள் (health care workers).

பிப் 2 முதல்: முன்கள பணியாளர்கள்.

மார்ச் 1 முதல்: 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 20 co-morbidities கொண்ட 45 – 59 வயதினர்.

ஏப்ரல் 1 முதல்: 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும்.

மே 1 முதல்: மாநிலங்களும் தனியாரும் 18 – 44 வயதினருக்கு முன்னுரிமை வழங்க அனுமதி.

குறிப்பு: 18 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பு மருந்து அனுமதி இல்லை. 2 முதல் 18 வரையிலானோருக்கு Phase 2 & Phase 3 பரிசோதனைக்கான அனுமதியை நேற்று பெற்றுள்ளது கோவாக்ஸின்.

பாஜக ஆளும் மாநிலங்கள் ஏற்கனவே கோவிஷீல்டு கோவாக்ஸினுக்கு ஆர்டர் கொடுத்துள்ளன (18 – 44 வயது).

ஆனால், ஆளத்தெரியாத தாக்கரே, ஸ்டாலின் போன்றோர் ஒன்றும் செய்யாமல், பிரதமருக்கு கடிதம் எழுதுகிறேன் என்ற பெயரில் யுடர்ன் போட்டு டேபிளை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். உருப்படியா ஏதாவது செஞ்சு தொலைங்கப்பா… கொரோனாவை விட உங்க தொல்லை தாங்கலை!

*** இந்த ஆண்டுக்குள் 130 கோடி தடுப்பு மருந்து கிடைத்தாலும், – தடுப்பூசி கட்டாயம் இல்லை என்பதால் – எத்தனை பேர் தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் என்பது கேள்விக்குறி. 60 கோடிப் பேர் போட்டுக் கொண்டாலே அதிவே அதிகம். ****

Exit mobile version