இந்தியாவில் இன்று (27.0.2022) காலை 7 மணி நிலவரப்படி 202.79 கோடிக்கும் அதிகமான (2,02,79,61,722) கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2,68,10,586 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
12-14 வயதிற்குட்பட்டோருக்கான கொவிட்-19 தடுப்பூசி, 16 மார்ச் 2022 முதல் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, ஏறத்தாழ 3.86 கோடிக்கும் அதிகமான (3,86,74,262) இளம் பருவத்தினருக்கு கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.18-59 வயது உடையவர்களுக்கு கொவிட்-19 முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி 10 ஏப்ரல் 2022 அன்று தொடங்கியது.
இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை (1,45,026) மிகக் குறைவாக உள்ளது. நாட்டின் மொத்த நோய் தொற்று உள்ளவர்கள் தற்போது 0.33 சதவீதமாக உள்ளனர்.இதை தொடர்ந்து இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.47 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20,742 பேர். குணமடைந்துள்ளனர். பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,32,67,571.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,313 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் 4,25,337 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 87.36 கோடி (87,36,11,254). வாராந்திரத் தொற்று 4.57 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 4.31 சதவீதமாக பதிவாகியுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















