செந்தில் பாலாஜியை கழட்டிவிட முடிவு…. அமலக்கத்துறையின் அடுத்தடுத்த அட்டாக்..பின்வாங்கும் தி.மு.க…

SENTHIL BALAJI

அமலக்கத்துறையின் பிடியில் தி.மு.கவின் முக்கியமான அமைச்சர்கள் வரிசையாக சிக்கி வருவதால் விழி பிதுங்கி நிற்கிறது திமுக. இதுமட்டுமில்லாமல் மாவட்ட நீதிமன்றங்களில் விடுவிக்கப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக வந்து மீண்டும் விசாரிக்க ஆரம்பித்துள்ளது.

கீழமை நீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டது தொடர்பான தீர்ப்பை படித்துவிட்டு 3 நாட்களாக உறங்க முடியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கவலை தெரிவித்துள்ளார்.மேலும் அந்த வழக்கை மீண்டும் விசாரணையில் எடுத்து கொள்ளப்படும் எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் வரும் நாடளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வரும் நிலையில் தமிழகத்தில் திமுகவை தோற்கடிக்க அதிமுகவை விட பாஜக பக்காவாக ஸ்கெட்ச் போட்டு காய்களை நகர்த்தி வருகிறது. அதுவும் தற்போது திமுக மீது மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பை சரியாக பயன்படுத்தி வருகிறது பாஜக.

திமுகவின் இமேஜை டேமேஜ் செய்து வருகிறது தமிழக பா.ஜ.க. ஊழல் பட்டியல் சொத்து குவிப்பு பட்டியல் அமைச்சர்கள் மீது புகார் என திமுகவை அடித்து துவைத்து வருகிறது இதுமட்டுமில்லாமல் ஒரு பக்கம் அமலாக்கத்துறையின் அதிரடி என தி.மு.கவை அசைத்துவிட்டது பாஜக.

உட்கட்சி பிரச்சனையால், அமைதி காக்கும் அதிமுக, இந்த விஷயத்தில் தமிழக பாஜகவிடம் கோட்டைவிட்டது என்றே சொல்லலாம். அதிமுக Vs திமுக என்பதையும் முறியடித்து, திமுக Vs பாஜக என்ற கோணத்தை தமிழக மக்கள் முன் நிறுத்தியுள்ளார் அண்ணாமலை.

அமலாக்கத்துறையின் அட்டாக் ஒருபுறம் நீதிமன்றத்தின் அட்டாக் என அடுத்தடுத்த கணைகள் திமுக அமைச்சர்கள் மீது பாய்ந்து வருகின்றன., அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், என லிஸ்ட் விரிவடைந்து வருகிறது.

செந்தில் பாலாஜி விஷயத்திலேயே தி.மு.கவால் ஒரு அளவுக்கு மேல் சப்போர்ட் செய்து பேசமுடியாத சூழலில், அவரது தம்பி, மற்றும் அவரது தம்பி மனைவி விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளபட்சத்தில், “சைலண்ட்” மோடிலேயே திமுக இருக்க வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

அமலாக்கத்துறையின் 5 நாள் கஸ்டடிக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார் செந்தில்பாலாஜி… கிட்டத்தட்ட 2 வாரங்கள் ஆகியும் அவர், சிறை அறைக்குள் செல்லாமல் சிறை மருத்துவமனையிலேயே இருக்கிறாராம்.

இதை அறிந்த ஸ்டாலின், “தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்காதீர்கள் அவரது உடல் நலம் ஆரோக்கியமாகஇருந்தால் சிறையில் இருக்க வையுங்கள்” என்று காவல்துறை உயரதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளாராம் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின்’

மேலும் செந்தில் பாலாஜியிடன் விசாரிக்கும் விசாரணையின் வீடியோவாக டெல்லியில் இருக்கும் முக்கியமாவனவர்களுக்கு அனுப்பபடுகிறதாம். மேலும் செந்தில் பாலாஜி மற்றும் அவர் தம்பியின் வீடு அலுவலங்களில் முக்கியமான ஆதாரம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாகவே இனி செந்தில் பாலாஜிக்கு உதவ வேண்டாம் என திமுக முடிவெடுத்துள்ளதாம்.

கிடைக்கப்பெற்ற ஆவணங்களை வைத்து அடுத்தடுத்த கைது செய்ய இருக்கும் நபர்களின் பட்டியலை வைத்து அமலாக்கதுறை கைது செய்ய தயாராகி வருகிறதாம். இதுவும் வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என தகவல்கள் கசிந்துள்ளதால் திமுக சற்று அச்சமடைந்துள்ளதாம்.

தேர்தல் நேரத்தில் கைது படலம் ஆரம்பித்தால் மக்களிடம் தி.மு.கவின் இமேஜ் டேமேஜ் ஆகும் அதுபோல் வேலை செய்ய ஆள் இருக்கமாட்டார்கள் என கவலையில் ஆழ்ந்துள்ளது அறிவாலயம்.

Exit mobile version