உலக பண்டிகையாக மாறிய தீபாவளி! உலக தலைவர்கள் கொண்டாடிய தீபாவளி! தமிழகத்தில் தாறுமாறான கொண்டாட்டம்!

DEEPAVALI OREDESAM

நேற்று இந்துக்களின் மிக பெரிய பண்டிகையான தீபாவளி உலகம் முழுவதிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது .தீபாவளி பண்டிகை ஒட்டுமொத்த இந்துக்களும் ஒரே நாளில் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். இந்து மக்கள் புத்தாடை உடுத்தி பட்டாசு கொளுத்தி, இனிப்புகள் வழங்கி தீபாவளியை கொண்டாடுவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகள் கொரானா பாதிபபால் பெரிய அளவில்பண்டிகைகள் கொண்டப்படவில்லை. இந்த ஆண்டு கொரோன குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் தீபாவளி பண்டிகை களை கட்டியது.

இந்தியா மட்டுமின்றி இந்த முறை உலக அளவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது தீபாவளி . மேலும் இந்துக்களின் பண்டிகைகளை உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளின் அதிபர்கள் கொண்டாடுகிறார்கள். இந்தியாவின் பண்டிகைளுக்கு விடுமுறை அளிக்கவும் பல நாடுகள் முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் வசித்து வரும் இந்துக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். மேலும்.அமெரிக்காவில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா முதற்கொண்டு அனைத்து அதிபர்களும் தீபாவளி பண்டிகைக்கு முக்கியத்துவம் அளித்து அதிபர் மாளிகையில் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். பாகிஸ்தானிய இம்ரான் கான் கூட தனது வாழ்ந்து செய்திகளை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.

தற்போது நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தில் முதன்முறையாக தீபாவளி கொண்டாப்பட்டு உள்ளது.அந்த கட்டடத்தில் தீப விளக்கு எரிவதை போன்று அனிமேஷன் உருவாக்கப்பட்டு இருந்தது. மேலும் ஹட்சன் நதிக்கரையின் இருபுறத்திலும் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடப்பட்டது.

வரலாற்றில் முதன்முறையாக நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தில்தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் அமெரிக்காவில் தீபாவளி நாளை விடுமுறையாக அறிவிக்கக் கோரும் மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியரான அமெரிக்க எம்.பி., ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமெரிக்க பாராளுமன்றத்தில் தீபாவளி நாளை விடுமுறையாக அறிவிப்பது குறித்த தீர்மானத்தை முன்மொழிந்தார். அதில், கலாசாரம், வரலாறு மற்றும் சமய ரீதியாக தீபாவளிக்கு உள்ள முக்கியத்துவம் அந்த மசோதாவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பிரிட்டனின் ராயல் மின்ட் நிறுவனம், தீபாவளியை முன்னிட்டு ஹிந்து கடவுளான மகாலட்சுமியின் உருவம் பொறித்த தங்கப் பதக்கத்தை முதன் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில், எலிசபெத் அரசிக்கு சொந்தமான ராயல் மின்ட் நிறுவனம், தங்க நாணயங்கள், பதக்கங்கள் ஆகியவற்றை தயாரித்து, உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது.இந்நிறுவனம் முதன் முறையாக தீபாவளியை முன்னிட்டு, ஹிந்து கடவுளான மகாலட்சுமியின் உருவம் பொறித்த, 20 கிராம் தங்கப் பதக்கத்தை தயாரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் ; வானவேடிக்கைகளுடன் பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.மேலும் பட்டாசு சத்தம் விண்ணை பிளந்தது. தமிழக அரசு வாழ்த்து தெரிவிக்காத நிலையில் பட்டாசு சத்தம் மூலம் இந்துக்கள் தங்கள் வலிமையை காட்டுகின்றார்கள்.

Exit mobile version