தாயநிதி T.R.பாலுவின் நாடகத்தை தோலுரித்து காட்டிய H.ராஜா

13.05.2020 அன்று முதன்மைச் செயலாளரை சந்திக்க சென்ற தி.மு.க தலைவர்கள் T.R. பாலு மற்றும் தயாநிதிமாறன் ஆகியோர் முதன்மைச் செயலாளரை மக்கள் பிரச்சனைக்காக சந்தித்ததாகத் தெரியவில்லை.

விளம்பரத்திற்காக சந்தித்தாகவே நினைக்கிறேன்..

உண்மையிலேயே இவர்கள் கூற்றுப்படி 1 லட்சம் மனுக்கள் இருக்குமானால் அவை அனைத்தையும் பிரித்து உரிய இலாக்காக்களுக்கு அனுப்ப அவகாசம் தேவைப்படும்.

ஆனால் அதற்கு காலக்கெடு கேட்டு வாதிட்டதும் அந்த மனுக்களின் கட்டுக்களை பல நபர்களோடு எடுத்துச் சென்று அதை புகைப்படம் எடுத்தது போன்றவை திமுகவினரின் மலிவுப் பிரசார யுக்தியாகவே தெரிகிறது..

திமுகவின் ஒன்றிணைவோம் வா முகநூல் பக்கத்தில் லைக் செய்து தொடரவும் என்றுள்ள பக்கத்தில் சென்று பார்த்தாலே அதில் 80% பேர் பீகாரைச் (பிரசாந்த் கிஷோர் உபயமோ) சேர்ந்தவராக இருப்பதை ஏற்கனவே நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.

நோய் தொற்று சமயத்தில் சீன் போட நினைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது..

மேலும் T.R.பாலு மற்றும் தயாநிதிமாறன் எங்களை முதன்மைச் செயலாளர் மரியாதை குறைவாக நடத்தினார். அதற்கு நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா என்றும் கூறியுள்ளனர். இது T.R.பாலு மற்றும் மாறனின் ஆதிக்க ஆணவப் போக்கை எடுத்துக் காட்டுகிறது..

ஈ.வெ.ரா காலம் முதல் தி.க, தி.மு.க பட்டியல் சமுதாய மக்களுக்கு எதிரான அமைப்புகளாகவே செயல்பட்டுள்ளது. ஏனெனில் மதுரையில் பட்டியல் சமுதாய மக்களின் ஆலயப் பிரவேசத்தை ஈ.வெ.ரா எதிர்த்தது உலகறிந்த விஷயம்..

திமுகவின் சமூக நீதி பேச்சு வெறும் உதட்டவிளானது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. தி.மு.கவின் இந்த பட்டியல் சமுதாய மக்களை இழிவு படுத்தும் செயலை வன்மையாக கண்டிக்கிறேன். தங்களது நடவடிக்கை மற்றும் பேச்சிற்கு T.R.பாலு மற்றும் தயாநிதி மாறன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

கடிதம்:- எச்.ராஜா,தேசிய செயலாளர், பாரதிய ஜனதா கட்சி.

Exit mobile version