ஜம்மு- காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவித் தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே இந்தியா பாகிஸ்தான் இடையே போர் வெடித்தால் பாகிஸ்தான் என்ற நாடே இருக்காது என தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் இந்தியாவை தடுக்க முடியாது உலகமே இந்தியா பக்கம் தான் செல்லும் என உலக நாடுகள் கூற ஆரம்பித்துவிட்டது காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த அப்பாவி மக்களின் மரணத்திற்கு இந்தியா தக்கப் பதிலடி தர வேண்டும் என்றே பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். இந்தியா இந்த விவகாரத்தில் கடுமையான பதிலடி கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள அனைத்து ஆப்ஷன்களையும் வைத்து பதிலடி தரப்போவதாக இந்தியா ஏற்கனவே கூறிவிட்டது.
2016-ம் ஆண்டு இதேபோல ஜம்மு காஷ்மீரில் கொடூரமான தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தினர். இதனையடுத்து முதலாவது சர்ஜிகல் ஸ்டிரைக்காக, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டுப் பகுதியை ஒட்டிய தீவிரவாத முகாம்களை நமது வீரர்கள் அழித்தனர். பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து நமது ராணுவம் தாக்குதல் நடத்தியதால் அந்த நாடு அலறியது.
இதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு புல்வாமாவிலும் நமது ராணுவ வீரர்களின் உயிரைக் குடித்த கொடூர தாக்குதலை பாகிஸ்தான் கும்பல் அரங்கேற்றியது. அப்போது, இந்தியர்களின் ஒட்டுமொத்த கோபத்தையும் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பாகல்கோட் பகுதியில் அதிரடித் தாக்குதல் மூலம் தணித்துகாட்டியது நமது ராணுவம். பாகல் கோட் பகுதியில் நடத்தப்பட்டது பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் 2-வது சர்ஜிகல் தாக்குதல். இந்த தாக்குதலில்தான் விமானப் படை விமானி சென்னையை சேர்ந்த அபிநந்தன். பாகிஸ்தான் வீரர்களால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த பின்னணியில்தான் தற்போது ஜம்மு காஷ்மீரில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகளை பச்சை படுகொலை செய்திருக்கிறது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத கும்பல். ஈவிரக்கமே இல்லாமல் மகன், மகள், மனைவி கண்முன்னேயே இந்த படுபாதக கொலையை நிறைவேற்றி இருக்கிறது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத கும்பல். இதனால் நமது நாடு பெரும் கோபத்தில் இருந்து வருகிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு அரசியல் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இது பாகிஸ்தானை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதன் உச்சமாக, பாகிஸ்தான் நினைத்துக் கூட பார்க்க முடியாத- கற்பனைக்கு எட்டாத பலமான அடி வாங்கப் போகிறது என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் மீது 3-வது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த நமது நாடு தயாராகிவிட்டது என்றே தெரிகிறது.
தற்போதைய தகவல்களின் படி, 3-வது சர்ஜிகல் ஸ்டிரைக் என்பது, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் நிலப் பகுதிகளை மீட்கும் நடவடிக்கையின் முதல் பகுதியாக இருக்குமாம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் 42 இடங்களில் மிக முக்கியமான தீவிரவாத முகாம்கள் இருக்கின்றனவாம். இந்த 42 தீவிரவாத முகாம்களையும் ஒருசேர அழிப்பதுதான் இந்தியாவின் வியூகமாம். இதனை எதிர்பார்த்து காத்திருக்கும் பாகிஸ்தான், தமது பாதுகாப்புப் படையினரை அதி உச்சநிலையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாம். இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.