குடிப்பதற்கு இடையூறாக இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்த தி.மு.க ஊராட்சி மன்ற துணைத்தலைவர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கீழமட்டையான் கிராமம் உள்ளது. சமீபத்தில் நடந்த ஊராக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., கிளைச் செயலாளராக உள்ள சித்தாண்டி என்பவர் மேலக்கால் ஊராட்சிஇல் யில் போட்டியிட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார்.

இவர் சோழவந்தான் கீழமட்டையான் கிராமத்தில் உள்ள அரசுத் துவக்கப்பள்ளி அருகே தினமும் நண்பர்களுடன் இணைந்து மது அருந்தி உள்ளார். குடித்து விட்டு அந்த பகுதியில் தொடர்ந்து அடாவடி செய்து வந்துள்ளார். இதை கட்டுப்படுத்த பின் இவர்கள் பள்ளிக்குப் பாதுகாப்பு தரும் வகையில் தனியார் அமைப்பு ஒன்று நான்கு இடங்களில் சிசிடிவி கேமராக்களை அமைத்து தந்தது.

இதனால் கோபமடைந்த திமுகவின் கிலாய் செயலாளரும் ஊராட்சி துணை தலைவருமான சித்தாண்டி, இரண்டு முறை சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கியுள்ளார். இரண்டு முறையும் தனியார் நிறுவனம் சேதமடைந்த கேமராக்களுக்கு பதில் புதிய கேமராக்களை பொருந்தியுள்ளது.

இந்த நிலையில் பள்ளிக்கு அருகில் மீதும் குடித்து கும்மாளமடித்த சித்தாண்டி போதையில் நண்பர்களுடன் வந்துமீண்டும் சிசிடிவி கேமரா இருந்ததைக் கண்டு கடும் கோபம் கொண்டார். நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு பள்ளி அருகே சென்ற அவர், கீழே இருந்து கற்களால் எறிந்து கேமராவை உடைக்கும் காட்சி அதே கேமராவில் பதிவானது.

பள்ளி சிறுவர்கள் அந்த பகுதி மக்கள் கேமராவை உடைக்க வேண்டாம் என கெஞ்சியுள்ளனர் அதை கண்டுகொள்ளாமல் போதையில் கேமராவை உடைத்து ரகளையில் ஈடுபட்டார் . இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.சிசிடிவி உபயம் தந்த தனியார் அமைப்புக்குத் தகவல் தெரிந்து ஊராட்சி மன்றத் துணை தலைவர் சித்தாண்டி மீது காடுபட்டி போலீசாரிடம் புகார் அளித்தனர்.

சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்ததால் ஊராட்சி மன்ற துணைத் தலைவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.அது மட்டுமில்லமல் மக்கள் அனைவரும் திமுக மீது கடும் கோபத்தில் உள்ளார்கள்.

Exit mobile version