600 கிலோ குட்கா கடத்தல் தி.மு.க மாவட்ட ஊராட்சி தலைவரின் கணவர் கைது! விடியல.. முடியல..

DMK GUTKA

DMK GUTKA

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே காரில் கடத்திவந்த 600 கிலோ குட்கா பொருளை காவல்துறை றிமுதல் செய்தனர். இந்த கடத்தல் தொடர்பாக திமுக மாவட்ட ஊராட்சித் தலைவரின் கணவர் உள்பட இரண்டு பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் தென்காசி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதன் காரணமாககுற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. கஞ்சா \7\குட்கா கடத்தல் சம்பவங்கள் தொடர்கதையாக நடந்துவருகிறது. இந்தநிலையில் தென்காசி மாவட்டத்தில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட ஆளுங்கட்சி பிரமுகரை போலீஸ் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம்.

வெளிமாநிலங்களில் இருந்து தென்காசி மாவட்டத்திற்கு காரில் குட்கா கடத்தி வரப்படுவதாக போலீஸூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், மாவட்ட எல்லையான சிவகிரியில் காவல்துறையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த காரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டதில் காரில் 600 கிலோ குட்கா, பான் மசாலா பொருட்கள் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, காரில் வந்தவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர், தென்காசி மாவட்ட ஊராட்சி கவுன்சில் தலைவரான தி.மு.க.வை சேர்ந்த தமிழ்ச்செல்வியின் கணவர் போஸ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, தி.மு.க. பிரமுகர் போஸ் மற்றும் கார் டிரைவர் லாசர் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து, கைதுசெய்யப்பட்ட இருவரும் சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்’

மேலும் காரில் வந்த சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் லாசரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை மத்தியச்சிறையில் அடைத்தனர். கைதான சுபாஷ் சந்திரபோஸ் ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். அவருடைய மனைவி தமிழ்செல்வி தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். இவர்கள் இருவரும் தி.மு.க. பிரமுகர்கள் ஆவர்.

சுபாஷ் சந்திரபோஸ் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் அவரை கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியக்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவரோடு தி.மு.க.வினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Exit mobile version