பியூட்டி பார்லரில் பெண்களைத் தாக்குவது, நில அபகரிப்பு, கள்ளத் துப்பாக்கி, தோட்டாக்கள் தயாரிப்பது என பல்வேறு சமூக விரோத குற்ற செயல்களில் தொடர்புடைய திமுகவினர் மீது, பேஸ்புக்-ல் ஆபாச புகைப்படங்கள் பதிவேற்றியதாக திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை போத்தனூர் பகுதியில், செய்தி சேகரிக்க சென்றவர் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், பொள்ளாச்சியில் ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றியதாக திமுக நிர்வாகிகள் 2 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் நாகராஜ், சுதர்சன், பேஸ்புக்-ல் சர்ச்சைக்குரிய வகையில் ஆபாச புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். இது குறித்து, கோவை மாவட்ட தெற்கு அதிமுக தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சதீஷ்குமார் என்பவர், பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பேஸ்புக்-ல் ஆபாசமான புகைப்படத்தை பதிவேற்றம் செய்து அந்த புகைப்படத்தில், அதிமுகவை சேர்ந்த ஒருவரின் மகன் என்று அவதூறாக பதிவு செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார். இதை தட்டிக் கேட்ட தன்னையும், தன்னுடன் சேர்ந்து வந்த இரண்டு பேரையும் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார்.
புகாரில் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகிகள் நாகராஜ், சுதர்சன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அடுத்தடுத்த குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் திமுகவினரால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















