ஏழை மாணவர்கள் பயன்பெற கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்க திமுக அரசு அனுமதி தரவில்லை: அண்ணாமலை

என் மண்; என் மக்கள்’ யாத்திரை வாயிலாக  பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை  ஆத்தங்கரைப்பட்டி அண்ணாநகரில் நடந்த மக்கள்சபை கூட்டத்தில் அவர் பேசியதாவது:

பிரதமர் மோடி செயல்படுத்தி வரும் மத்திய அரசின் திட்டங்கள் மக்களை நோக்கி வருகிறதா என்று பார்க்க வந்துள்ளோம். மோடி பிரதமரான பின் தான் தனி மனிதனுக்கான திட்டம் கொண்டு வரப்பட்டது. மோடி தான் கிராமத்தில் இருப்பவர்களை பற்றி யோசித்தார்.

வீடு, காஸ் இணைப்பு, வங்கி கணக்கு இல்லாதவர்கள் கணக்கிடப்பட்டு அவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 42 கோடி புதிய வங்கி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வாயிலாக விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. நலத் திட்டங்களுக்கு செலவு செய்யும் பணத்தில், 88 சதவீதம் மத்திய அரசு கொடுக்கிறது. 66 சதவீத மக்களின் வீடுகளுக்கு குடிநீர் கிடைத்து விட்டது.கிராமங்கள் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இது போன்ற கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

விரைவில் 6 லட்சம் ஊராட்சிகளுக்கு ‘5 ஜி’ இன்டர்நெட் சேவை கிடைக்கப்போகிறது. விவசாயிகளுக்கு உர மானியமாக ெஹக்டேருக்கு 9000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. புதிய தொழில் துவங்கவும் இருக்கும் தொழிலை மேம்படுத்தவும் மத்திய அரசு வாயிலாக மானியத்துடன் கூடிய பல்வேறு கடன் திட்டங்கள் உள்ளன; அவற்றை பயன்படுத்துங்கள்.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி வாயிலாக, தரமான இலவச கல்வி வழங்க முடியும். தமிழகத்திற்கு 100 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தேவைப்படுகின்றன.

மாநில அரசு பள்ளி துவக்க அனுமதி தருவதில்லை. அதற்கான இடமும் ஒதுக்கி தருவதில்லை. இதனால் இந்த திட்டம் தமிழக மக்களுக்கு கிடைக்காமல் போகிறது.மக்களுக்கான பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் மோடிக்கு 2024 தேர்தலில் மீண்டும் ஆதரவு தாருங்கள்.இவ்வாறு பேசினார்.

Exit mobile version