திமுகவின் உதயசூரியன் சின்னத்தை ரத்து செய்ய வேண்டும் ! சுப்பிரமணியசாமி அதிரடி..

தமிழகத்திலுள்ள பிராமணர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என திமுக செயலாளர் பேசிய விவகாரத்தில் திமுக வின் கட்சி பதிவை ரத்து செய்துவிட்டு உதயசூரியன் சின்னத்தை திரும்பப்பெற வேண்டும்.

பிராமண சமுதாயம் குறித்து அவதூறாக திமுகவினர் பேசி வருவதால் திமுகவின் அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்து அக்கட்சிக்கு வழங்கப்பட்ட உதயசூரியன் சின்னத்தை முடக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று திமுக தமிழகத்தில் ஆட்சி அமைத்ததிலிருந்து பிராமணர்களுக்கு எதிராக அக்கட்சி செயல்படுவதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

கடந்த வருடம் தமிழகத்தில் பிராமண சமூகத்தினர் பாதிக்கப்படுவதை தடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் திற்கு அவர் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் திமுகவின் அங்கிகாரத்தை முடக்க வேண்டுமென சுப்பிரமணியன் சுவாமி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,’ தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கட்சியான திமுகவின் செயலாளர் ஒருவர், பிரதிநிதித்துவ அடிப்படையில் ஆணையம் வகுத்துள்ள கொள்கைகளை மீறியுள்ளார் என்பதை தேர்தல் ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்..

பிராமண சமூகம்

ஈ.வெ.ராமசுவாமி நாயக்கர் தலைமையிலான ‘திராவிட’ இயக்கத்தின் நிறுவனர் [தி.மு.க.வுக்குப் பெரியார் என்று அழைக்கப்படுபவர்] முன்பு பரிந்துரைத்தபடி தமிழ்நாட்டின் பிராமணர்கள் இனப்படுகொலைக்கு ஆளாக வேண்டும் என்று கூறினார். இந்த அச்சுறுத்தல் தமிழ்நாட்டில் உள்ள பிராமண சமூகம் என்று அழைக்கப்படுவோரின் அடிப்படை உரிமைகளை நேரடியாக பாதிக்கிறது.

வாக்குரிமை பாதிக்கும்

மேலும் அவர்கள் தேர்தலில் வாக்களிக்கச் செல்லக்கூடாது என்ற அச்சத்தில் கூறப்பட்ட பிராமண சமூகத்தின் வாக்குரிமையையும் பாதிக்கலாம், இதனால் திமுகவுக்கு எளிதாக வெற்றி பெறலாம். பல தொகுதிகளில் இதனால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு, தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிரான இந்த இனப்படுகொலை அச்சுறுத்தல், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தையும், தேர்தல் ஆணையம் அவ்வப்போது வெளியிடும் சுற்றறிக்கைகளையும் மீறும் செயல் என்று முதன்மையான பார்வைக்கு எடுத்துக் கொண்டால், நான் மகிழ்ச்சியடைவேன்.

தேர்தல் ஆணையத்திற்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்

Exit mobile version