மாமூல் சம்பவத்தில் சிக்குகிறாரா போக்குவரத்து துறை அமைச்சர் ! ஆம்னி பஸ்களுக்கு அமைச்சர் மாமூல் மிரட்டல்!

தமிழகத்தில் திமுக மீதான ஊழல் குற்றச்சட்டுகள் ஒவ்வொன்றாக வெளிவருகிறது. பா.ஜ.க எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. மேலும் திமுக அமைச்சர்கள் அனைவரும் விரைவில் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதவியை இழப்பார்கள் என தான் தெரிகிறது. ராக்கெட் வேகத்தில் பணம் சம்பாதிக்க முடிவு செய்து பணியாற்றி வருகிறார்கள்.

தற்போது தான் போக்குவரத்து அமைச்சர் மீது ஸ்வீட் டெண்டர் குறித்து ஊழல் புகார் எழுந்தது. பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்வீட் டெண்டர் ஊழலை தடுத்து நிறுத்த முதல்வருக்கு கோரிக்கை வைத்தார். அதனை தொடர்ந்து டெண்டர் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் அடுத்த சம்பவத்தில் இறங்கி உள்ளார். ஆம்னி பேரூந்துகளிடம் மாமூல் வேட்டையில். பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வாங்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் அறிவிப்பது, வாடிக்கையான வேடிக்கையாகிவிட்டது. ஆனால், ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் நிர்ணயிக்க அரசு நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது.

பண்டிகைக்காலம் வரும்போது, ‘அதிகக் கட்டணம் வாங்கும் ஆம்னி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பது வாடிக்கையாகி விட்டது. இந்த ஆண்டும் அந்த சம்பிரதாய எச்சரிக்கை, அமைச்சர் ராஜகண்ணப்பனால் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பஸ்களில் எப்போது, எவ்வளவு கட்டணம் வாங்கினாலும் அதிகக் கட்டணம் என்ற முறையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் நடவடிக்கை எடுக்க முடியாது என்பது தான் உண்மை நிலை. அவ்வாறு நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுமில்லை. அரசு ஒரு கட்டணத்தை நிர்ணயித்தால்தான், அதை விட அதிகக் கட்டணம் என்று சொல்ல முடியும்.

அரசு பஸ்களுக்கு ஒரு ஸ்டேஜ்க்கு இவ்வளவு என்றும், இரண்டு நகரங்களுக்கு இடையே எவ்வளவு என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதை விட அதிகக் கட்டணம் வாங்கும்போது, அரசு பஸ்களின் மீதே அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடிகிறது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில், அதிகக் கட்டணம் வாங்கிய பல ஆயிரம் அரசு பஸ்களுக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு கட்டணமே நிர்ணயிக்காத ஆம்னி பஸ்களுக்கு, எப்படி அதிக கட்டணம் என்று நடவடிக்கை எடுக்க முடியுமென்று தெரியாமல் அதிகாரிகள் குழம்புகின்றனர். இதனால்தான், அதிக வேகம், அதிக லக்கேஜ் என சம்பந்தமே இல்லாத காரணங்களைக் கூறி, அதற்கு மட்டுமே அபராதம் விதிக்கின்றனர்.

பண்டிகை நாட்களில் மட்டுமின்றி, வார விடுமுறை நாட்களிலும், வார நாட்களை விட அதிகக் கட்டணம் வசூலிப்பதுதான் வழக்கமாக நடக்கிறது. அதற்கும் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தான், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மேற்கொள்கின்றனர்.

அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் எல்லாவற்றிலும் அதிகக் கட்டணத்தால் பாதிக்கப்படுவது ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தான். இந்த ஆம்னி பஸ்கள் போக்குவரத்தை அரசு வரன்முறைப்படுத்தி, அதற்குக் கட்டணத்தையும், வரியையும் நிர்ணயித்தால், அரசுக்கும் பெரும் வருவாய் கிடைக்கும். மக்களும் பாதிக்காத வகையில், போக்குவரத்து வசதியைப் பெற முடியும்.

ஆம்னி பஸ்களில் இருந்து கொட்டும் மாமூல், ஆளும் கட்சிக்கும், அதிகாரிகளுக்கும் போவது தான் இதற்கான ஒரே காரணம் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இப்போதைய அமைச்சரின் எச்சரிக்கையும், மாமூலை உயர்த்தித்தர வேண்டுமென்பதற்கு ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட மறைமுக அறைகூவலாகவே தெரிகிறது.

தகவல் நன்றி : தினமலர்

Exit mobile version