கள்ளச்சாராயம் காய்ச்சி குண்டாஸில் உள்ளே சென்றவர் தான் திமுகவின் அமைச்சர்-அண்ணாமலை அதிரடி !

தமிழக கைத்தறித்துறை அமைச்சர் காந்தி அவர்களிடம் சில நாட்களுக்குக்கு முன்பு, தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லை என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளாரே அது பற்றி தங்கள் கருத்து என்ன? என்று பத்திரிக்கையாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பி இருந்தனர்.

கொள்கை வேறுபாடு, கட்சி வேறுபாடு, என எது வேண்டுமானலும் இருக்கலாம், ஆனால் பொறுப்பான பதவியில் உள்ள அமைச்சர் கண்ணியமான முறையில் பத்திரிக்கையாளர்களுக்கு பதில் அளிக்காமல். அவனெல்லாம் ஒரு தலைவனா? என்று ஒருமையில் பா.ஜ.க தலைவரை விமர்சனம் செய்து உள்ளார்.

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் மற்றும் தனது பேரன் வயது உள்ள ஒருவரை மிகவும் கீழ்த்தரமான முறையில் பேசி தனது தலைவன் எவ்வழியோ அவ்வழியே நானும் என தனது ஆணவ போக்கை அமைச்சர் காட்டியுள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக அமைச்சர் காந்தியின் இந்த பேச்சுக்கு பதிலடி தரும் விதத்தில். இன்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது, யாரோ ஒரு அமைச்சர் அவர் பேர் காந்தின்னு சொன்னாங்க, சத்தியமா அவர் பெயரை நேற்றுதான் கேள்விப்பட்டேன். காந்தி என்று சொல்லிவிட்டு வாந்தி எடுக்கிறார். 1994 ஆம் ஆண்டு கள்ளச்சாராயம் காய்ச்சி அப்போதைய அதிமுக ஆட்சியில்,

புரட்சித்தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்களால் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறைக்குப் போன ஒரு மனிதர், மக்கள் பிரதிநிதியாக வந்து என்னைப் பற்றி குறை சொல்லுகிறார். அதாவது ஒரு அரசியல்வாதிக்கு மற்றொருவரை பற்றி குறை சொல்ல வேண்டுமென்றால் தகுதி வேண்டும் என திமுக அமைச்சர் காந்தியை வெளுத்து வாங்கிய அண்ணாமலை.

மேலும், அமைச்சர் காந்தி கள்ள சாராயம் காய்ச்சி குண்டர் சட்டத்தில் உள்ளே சென்றாரா.? இல்லையா.? என நீங்களே அவரிடம் கேள்வி கேளுங்கள், அவருக்கு எல்லாம் என்ன தகுதி இருக்கு என வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு வந்து காந்தி என பெயர் வைத்துக் கொண்டு வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார் என அமைச்சர் காந்தியின் இழிவான பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..

இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் அமைச்சர் காந்தியின் பேச்சிற்கு சிறப்பான பதிலடியை கொடுத்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது அதற்குரிய லிங்க கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

Exit mobile version