மோடி அரசு கொடுக்குது! திமுக அரசு லேபிள் ஒட்டுது! அம்பலப்படுத்தினார், வானதி சீனிவாசன் எம்எல்ஏ!

பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா முதல் அலையின் போது 8 மாதங்கள் 80 கோடி ஏழை மக்களுக்கு கரீப் கல்யாண் யோஜனா அன்ன போஜனா திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை இலவசமாக வழங்கினார்.

அதேபோல கொரோனா 2-வது அலை பாதிப்பை முன்னிட்டு இந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களுக்கு இலவச அரிசி, கோதுமை வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் அதனை மேலும் நீட்டித்து, வருகிற தீபாவளி (நவம்பர் மாதம்) வரை 80 கோடி ஏழை மக்களுக்கும் அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மோடி அரசின் அறிவிப்புபடி தமிழகத்திற்கு தேவையான அரிசி, கோதுமை ஒதுக்கீடு செய்து அனுப்பி வைக்கப்பட்டன. அவை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டும் தமிழகத்திற்கு மோடி அரசு, அரிசி, கோதுமை வழங்கி உள்ளது. வருகின்ற தீபாவளி வரை தமிழகத்திற்கு தேவையான அரிசியும், கோதுமையும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திமுக அரசு சார்பில் மக்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

திமுக அரசின் இந்த பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தும் வகையில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டிற்கு மார்ச் 20- ஏப்ரல் 21 வரை மத்தியஅரசு ரேஷன் கடைகள் வாயிலாக அரிசி , கோதுமை வழங்கியதற்காக செலவிட்ட தொகை 9,040 கோடி.மாநில அரசு 970 கோடி.

மத்திய அரசின் முழுமையான கொரானா கால (ஏப் 20-நவ 20,மே 21-ஜூன் 21 ) தானிய
உதவி 4,907 கோடி .பசியாற்றும் மோடி அரசு.

இவ்வாறு வானதி சீனிவாசன் எம்எல்ஏ குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் மோடி அரசின் திட்டங்களுக்கு, திமுக அரசு லேபிள் ஒட்டும் போக்கை, வானதி சீனிவாசன் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.

Exit mobile version