நட்சத்திர ஓட்டலில் மதுபோதையில் தகராறு செய்ததையடுத்து திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். பஜாஜ் நிறுவனத்தின் மண்டல தலைமை அதிகாரியாக ஆக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு அண்ணாசாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் (தி பார்க்) மது குடித்துவிட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா, ஸ்ரீராமை பார்த்து 4 பீர் வாங்கி வரும்படி மிரட்டி பீர் பாட்டிலால் மண்டையில் அடிக்க முயன்றதாக தெரிகிறது. மேலும் சூர்யா கையிலிருந்த டார்ச்சை கொண்டு அடிக்க முயன்று கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீராம் இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கோரி புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த புகார் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசார் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. நட்சத்திர ஓட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















